சீலம்பூரில் நாளை காங்., பொதுகூட்டம் ராகுல் பங்கேற்பு
புதுடில்லி:சீலம்பூரில் இன்று நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுகிறார்.இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் டில்லி மாநில பொறுப்பாளர் காஜி நிஜாமுதீன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நாட்டு மக்களின் குரலாக ராகுல் உருவெடுத்துள்ளார். நாட்டில் எங்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் ராகும் அங்கு வந்து மக்களுக்காக குரல் கொடுப்பார். டில்லி சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நாளை மாலை 5:30 மணிக்கு, வடகிழக்கு டில்லி சீலம்பூரில் நடக்கிறது.இந்தப் பொதுக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி களம் இறங்கி விட்ட நிலையில், பா.ஜ.,வின் முதல் பொதுக்கூட்டம் கடந்த வாரம் ரோகிணியில் நடந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் மாதமே 'டில்லி நியாய யாத்திரை' துவக்கி டிசம்பர் 7ம் தேதி நிறைவு செய்தது.டில்லி சட்டசபைக்கு 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதேபோல, 2020ம் ஆண்டிலும் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. பா.ஜ., 2015ல் மூன்று தொகுதிகளிலும், 2020ம் ஆண்டில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.