உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் சுற்றுலாவிற்கு ஊக்கம்: ஜிப்லைனில் பயணித்த ராகுல்

வயநாட்டில் சுற்றுலாவிற்கு ஊக்கம்: ஜிப்லைனில் பயணித்த ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்கு அமைக்கப்பட்டு இருந்த நீண்ட ஜிப்லைனில் பயணம் செய்தார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு லோக்சபா தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அங்கு அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். நேற்று முன்தினத்துடன் பிரசாரம் முடிவு பெற்றது. இதனையடுத்து ஓய்வில் இருக்கும் ராகுலும், பிரியங்காவும் வயநாடு தொகுதியில் உள்ள காரபழா அணைக்கு சென்றனர். அங்கிருந்த நீளமான ஜிப்லைனில் ராகுல் பயணித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சீர்குலைந்த வயநாட்டின் சுற்றுலாவை மீட்டெடுக்க இந்த பயணத்தை மேற்கொண்டதாக ராகுல் கூறியுள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது; வயநாட்டில் பிரசாரம் முடிவடைந்த நிலையில், உள்ளூர் மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல்வேறு சவால்களை சந்தித்தும் அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர்கள் ராட்சத ஊஞ்சல், டிராப் டவர் மற்றும் ஜிப்லைன் ஆகியவற்றை அமைத்து வயநாடு பாதுகாப்பானது என்பதை பார்வையாளர்களுக்கு காட்டி அசத்துகின்றனர். நானும் ஜிப்லைனில் பயணித்து ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தேன் எனக்கூறியுள்ளார்.மேலும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடிய ராகுல், வயநாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. நிலச்சரிவு என்பது உள்ளூர் நிகழ்வு. இதனால் சுற்றுலா பாதிப்பு அடையாது எனக்கூறினார்.மேலும், பிரியங்காவை ஜிப்லைனில் பயணிக்குமாறு கூறிய ராகுல், வயநாட்டை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இந்த வீடியோவில் ராகுலை புகழ்ந்து கருத்து பதிவிட்டு வரும் இணையதளவாசிகள் அதனை வைரலாக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAJ
நவ 13, 2024 23:29

நீ இன்னும் திருந்தலையா?? ..


இராம தாசன்
நவ 13, 2024 23:10

5 வருடம் இருந்தாரே என்ன செய்தார்.. இப்போது தங்கையை செய்ய சொல்கிறார். நினைத்து பாருங்கள் இவர் பிரதமராக வெளி நாடு சென்றால் செல்வார் - அமெரிக்கா சென்றால் டிஸ்னி வேர்ல்ட் / தீம் பார்க் ரங்க ராட்டினம் போவார் - லண்டன் போனால் அங்கே உள்ள பொழு போக்கு இடங்களுக்கு சென்று போட்டோ ஷூட் எடுத்து போடுவார் விடியல் முதல்வர் செய்ததை போல்


Amruta Putran
நவ 13, 2024 22:22

CJI oath taking ceremony, Pappu didn’t participate. Is it because CJI’s father gave judgement against his Grandma?


rama adhavan
நவ 13, 2024 21:55

நடிகராக போகலாம். ஸ்டண்ட் காட்சிகளில் டூப்புக்கு அவசியம் இல்லை. ஆனால் அரசியலுக்கு உபயோகம் இல்லை.


ManiK
நவ 13, 2024 21:31

ஜிப் லைன் என்ன, ஆட்ரா ராமா ஆட்ரா ராமாக்கு குட்டிக்கரணம் கூட ஆடுவார் இந்த பதவி வெறிபிடித்த 420 hero


Ramesh Sargam
நவ 13, 2024 21:26

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல நூறு மக்கள், மிருகங்கள் இறந்தன. At least உயிர் பிரிந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு சுற்றுலாவாம். இவர் ஒரு மனிதாபிமானம் அற்றவர்.


SUBBU,
நவ 13, 2024 20:54

கேரளாவில் வெறும் நெற்றியோடு கழுத்தில் சிலுவை அணிந்தும், மஹாராஷ்ட்ராவில் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொண்டு கழுத்தில் உத்திராட்சம் அணிந்தும் பிரச்சாரம் செய்த ராகுல்காந்தியின் இரட்டை வேட நடிப்பை பாராட்டி அவருக்கு Icchadhari Gandhi என்ற பட்டத்தை கொடுக்கலாம்.


Nandakumar Naidu.
நவ 13, 2024 20:40

இந்திய அரசியலில் எதற்கும் உபயோகமில்லாத மத வெறி பிடித்த ஹிந்து விரோத மற்றும் தேச விரோத பிராணி. வரும் தேர்தல்களில் அழிக்க பட வேண்டிய ஒன்று.


M Ramachandran
நவ 13, 2024 20:34

சர்க்கஸ் வேலையை காட்டாமல் பாராளுமன்ற ஒரு கட்சியின் தலைவன் என்ற எண்ணத்துடன் ஜிப்னாடிக்ஸ் செய்யாமல் இருக்கவும் கல்லிலே விழுந்து காயம் பட்டலோ பள்ளு விழுந்தாலோர் மோடியை குறை சொல்லி ஊடகங்களில் பேட்டிகொடுக்காமல் இருப்பது மனித குணம்?


M Ramachandran
நவ 13, 2024 20:24

ராணி வீட்டு கண்ணுகுட்டி உங்கள் பல்லக்கை தூக்க பல எடுபுடிகள் தயாராக காத்து கொண்டு நிற்குது. அனுபவி ராஜா அனுபவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை