உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் சுற்றுலாவை மீட்டெடுக்க ராகுல் விருப்பம்

வயநாட்டில் சுற்றுலாவை மீட்டெடுக்க ராகுல் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் கேரள மாநில காங்., நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். அப்போது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நடந்து வரும் நிவாரண பணிகள் குறித்தும், சுற்றுலா துறை குறித்தும் கலந்துரையாடினர்.இதனையடுத்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ராகுல் கூறியதாவது: மோசமான நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும். நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.வயநாடு மக்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய முக்கிய அம்சமான சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை ஓய்ந்த உடன் வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு ஊரிலும் அல்ல. பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தளமான வயநாடு விரைவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் பயணிகளை ஈர்க்கத் தயாராகும். அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
செப் 02, 2024 04:47

இதுக்கு மேலயும் ஸ்டண்ட் அடிக்க ஒரு ஐடியா. நீங்கள் கடப்பாரை, மண்வெட்டி தூக்கி கொண்டு வயநாட்டில் மண் அள்ளி போடும் வேலை செய்கிற மாதிரி போட்டோ சூட் எடுத்து உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் வர வைக்கலாம் முயற்சி செய் ராசா


R K Raman
செப் 01, 2024 23:18

நேஷனல் ஹெரால்டில் அடித்த பணத்தை இங்கு கொடுக்கலாம் ராவுல் சார்


Ramesh Sargam
செப் 01, 2024 21:47

முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடு, உறவுகளை இழந்த மக்களுக்கு தங்க வீடு வசதி ஏற்படுத்து. பிறகு பார்த்துக்கலாம் சுற்றுலாவை மீட்டெடுப்பதை பற்றி...


M Ramachandran
செப் 01, 2024 20:24

ராவுளு ஒரு மாத சம்பளத்தையாவது கொடுத்து உதவினீர்களா? சும்மா ரீல் எல்லாம் விட்டு அவர்களை நோக அடிக்காதீர்.


M Ramachandran
செப் 01, 2024 20:06

இனி மூஞ்சியை வய நாட்டு பாக்கமா காட்டிடாதீங்க. பிஞ்சி முகம் பிஞ்சா முகமாகி போயிடும்.


Pandi Muni
செப் 01, 2024 19:07

காலு வச்ச இடமெல்லாம் சறுக்கி மக்களெல்லாம் சாகிறாங்களே பப்பு. உன் சொந்த நாட்டுக்குத்தான் போய் தொலையேன்


SUBBU,MADURAI
செப் 01, 2024 19:56

அயல் நாட்டு பெண்ணின் (சோனியா) குழந்தை தன் தந்தையின் தேசத்தை காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் என்பது சாணக்கியன் வகுத்த நீதி என்பதை இந்த பப்பு நொடிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 19:03

பிரச்னைக்கு காரணமே சுற்றுலாதான் .... அப்பகுதியில் இயற்கையை மீறி கட்டிடங்கள் காட்டுவதும், இயற்கை வனப்பகுதிகளை அழித்து குடியிருப்புக்கள், ஹோட்டல்கள், பிக்னிக் ஸ்பாட்டுகள் உருவாக்கியதும்தான் காரணம் ..... இதை கேரளா உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது ..... தனது மாஜி தொகுதி என்பதால் தொகுதியைப் பற்றி அடிப்படை விஷயங்களாவது அறிந்திருக்க வேண்டாமா ????


saravan
செப் 01, 2024 18:13

அதென்ன வயநாடு ? வேண்டாம் என்றுதானே பதவியை ராஜினாமா செய்தார்... அதை அறப்போகிறவர் பார்த்துக்கொள்வார்


panneer selvam
செப் 01, 2024 18:13

Rahul ji , please consult your advisors before you speak . The area affected at Wayanad is prone to land slides due to porous top soil and thunderstorm during monsoon causing heavy flooding . Thease areas are not meant to be used for tourism . Any tourism brings a lot of visitors and many constructions that bring disaster to this area .


புதிய வீடியோ