உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பல்கலைக்கு ராகுல் திடீர் வருகை

டில்லி பல்கலைக்கு ராகுல் திடீர் வருகை

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்திற்குள் முன் அறிவிப்பின்றி லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான ராகுல் சென்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.நேற்று ராகுல் திடீரென டில்லி பல்கலை.க்கழகத்திற்கு நுழைந்தார். அவரது வருகை குறித்து பல்கலை. நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. முன்அறிவிப்பின்றி ராகுல் பல்கலை.க்குள் நுழைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பல்கலை.க்குள் நுழைந்ததும் டில்லி பல்கலை. மாணவர் சங்கத்தினரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.ராகுலின் இந்த செயலுக்கு பா.ஜ., மற்றும் என்.எஸ்.யு.ஐ. எனப்படும் தேசிய மாணவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.முன்னறிவிப்பின்றி பல்கலை.க்குள் நுழைவது சட்டவிரோதம் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போன்று 2023ம் ஆண்டு மே மாதம் இப்பல்கலை.க்குள் முன்னறிவிப்பு இன்றி ராகுல் வருகை தந்ததாகவும் பா.ஜ.,வைச் சேர்ந்த நிர்வாகி கூறினார். ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்கலை. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Narasimhan
மே 23, 2025 12:22

இவருக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம். பல்கலையில் பார் திறக்கும் எண்ணம் இருக்குமோ?


Anand
மே 23, 2025 11:41

திறந்த வீட்டில் ஏதோ......


Anand
மே 23, 2025 11:27

விடுங்கப்பா.....


Ramalingam Shanmugam
மே 23, 2025 11:08

ஆமை எதுக்கு போவுது


Ramesh Sargam
மே 23, 2025 11:02

கழுதைக்கு என்ன தெரியும் கற்பூர வாசனை பற்றி...


Anand
மே 23, 2025 10:44

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?


Mohan
மே 23, 2025 09:48

பப்பு மெதுவா பத்த வெச்சிட்டாரு இன்னும் சில நாட்களில் டெல்லி பல்கலையில் ஒரு கலவரம் சலசலப்பு க்கு வாய்ப்பு இருக்கு ..


Ramachandran K
மே 23, 2025 09:45

For going to canteen no need for prior permission.


Kalyanaraman
மே 23, 2025 08:18

தொடர்ந்து தேசத்திற்கு எதிரான கருத்துகளை பரப்புவதும் எதிரான செயல்களையும் செய்து வரும் இந்த ராகுலை நமது நீதிமன்றங்கள் ஏன் தண்டிக்கவில்லை?


angbu ganesh
மே 23, 2025 09:26

எல்லாருமே காங்கிரஸ் periodlya வேல கெடச்சவனுங்க ஒரு விசுவாசம் ஆனா மோடி government ஏன் மௌனம் காக்குதுன்னுதான் தெரியல


RAJ
மே 23, 2025 07:47

அது பசங்க படிக்கிற இடம்... அங்க போய் அவிங்க நேரத்தை வீணடிக்காதீங்க... ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை