உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு; இன்று முதல் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு; இன்று முதல் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யலாம். புதிய நடைமுறை இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. உங்களுடைய கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!நீண்ட துார பயணம் மேற்கொள்ளும், பயணியரின் முதல் சாய்சாக இருப்பது ரயில் தான். முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்யும் பயணியருக்காக, தனி இருக்கை ஒதுக்கிக் கொடுக்கப்படும். படுக்கைகளில் அமர்ந்தும், துாங்கிக் கொண்டும் நிம்மதியாக செல்லலாம்.பஸ்சில் படுக்கை வசதி கொண்ட சீட் இருந்தாலும், பள்ளங்களில் ஏறி, இறங்கும்போது இடைஞ்சல்களாக இருக்கும். இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்வோருக்கு தூக்கத்தை பாதிக்கும். ஆனால் ரயிலில் அப்படி இல்லை. எந்தவித தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்யலாம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், டிக்கெட் கிடைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வதற்கு முன்பே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முன்பதிவு நல்வாய்ப்பாக உள்ளது.ஆனாலும் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், கடைசி நேரத்தில் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதும் வழக்கமாக நடக்கிறது. இதனால் மற்றவர்களாலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், ரயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரயில்வே துறை குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

கீரன் கோவை
நவ 01, 2024 17:56

இதெல்லாம் டிக்கட் வாங்கறவங்களுக்குத் தான் பிரச்சினை. நாங்கெல்லாம் கலாகார் மாதிரி.


ديفيد رافائيل
நவ 01, 2024 16:45

இதில் பாதிக்கப்படுவது beokers மட்டுமே. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை


yts
நவ 01, 2024 14:31

waste of time


S ANANTHASUBRAMANI
நவ 01, 2024 13:53

for senior citizen, pl give 90 days time to book the train tickets. pl reconsider the issue


M Ramachandran
நவ 01, 2024 20:45

இப்போ உள்ள மத்திய அரசு சீனியர் சிட்டிசன் வேண்டாத தொல்லையாகா நினைக்கிறது. ஆயுள் சீக்கிரம் முடிந்தால் பணம் மிச்சம் என்று நினைக்குது


Ganesun Iyer
நவ 01, 2024 13:51

ஏங்க நீங்க வேற காமெடி செஞ்சிகிட்டு.. கருத்து போட்டாமட்டும் மாத்தவா போறாங்க.. இத ஏற்கனவே நடைமுறையில் உள்ளவற்றை நிபுணர்கள் குழ ஆய்ந்து எடுக்கப்பட்ட முடிவு.. கருத்துன்ற பேர்ல் காரிதுப்ப ஒரு கூட்டம் கிளம்பி வரும். இத விட பல பேர் எதிர்பார்க்கிறது முதியோர் டிக்கெட்டுக்கான தள்ளுபடி தொகை..


சாண்டில்யன்
நவ 01, 2024 18:44

கருத்து போட்டாமட்டும் மாத்தவா போறாங்க. நல்லா சொன்னார் இவர் வல்லான் வகுத்ததே வாய்க்கால்னு செயல் படறாங்க. இந்த நாடோடி கும்பலுக்கு "கன்ஸஷனை" நிறுத்தினாங்க பாரு அதுதான்யா நிபுணர்கள் குழ ஆய்ந்து எடுக்கப்பட்ட முடிவு


R Hariharan
நவ 01, 2024 13:40

ரொம்ப நல்லது. கூடிய சீக்கிரம் மேலும் பல ரயில்கள் விட வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கொல்லம் சென்னை வலி செங்கோட்டை தென்காசி திருநெல்வேலி போன்ற இடங்களிருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவை, பாண்டிச்சேரி, சேலம், பெங்களூரு, ஹைதெராபாத், மும்பை, கொல்கத்தா, நியூ டெல்லி, காரைக்குடி போன்ற இடங்களுக்கு ரயில் சேவை வேண்டும். தாம்பரம் செங்கோட்டை வியா பட்டுக்கோட்டை தினசரி சேவை வேண்டும்.


R.Natatarajan
நவ 01, 2024 13:19

ஆல்ரெடி முதியோர் கட்டணம் எல்லை மிடியோர்க்கு மட்டும் 90. நாட்கள் முன் பதிவு செய்ய ரயில்வே நிர்வாகம் பரிசீலன்நை செய்ய வேண்டும்


தமிழ்வேள்
நவ 01, 2024 13:14

30 நாட்களாக குறைப்பது நல்லது ..ஒருவர் ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களில் ஒரே டெஸ்டினேஷன் அல்லது கூடுதல் /குறைவு டெஸ்டினேஷன்களுக்கு புக்கிங் செய்வது ஆதார் இணைப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும் .....இதன்மூலம் தேவையற்ற ரத்து மற்றும் பயண தவிர்ப்புகளை தடுக்க இயலும் ..


Muthuraj Madasamy
நவ 01, 2024 15:02

good suggestions, need to strict the booking rules.


R. BALAJI
நவ 01, 2024 13:10

90 days அட்வான்ஸ் முன்பதிவு நியாயமானது ரேசொணைப்பிலே. நோ 120 நோ 60


Sivagiri
நவ 01, 2024 13:07

தினமும் கோடிக்கணக்கில் ரயிலில் போயிட்டு வராங்க - எல்லார்டையும் கருத்து கேட்டுக்கிட்டு இருந்தா ரயிலே ஓட்ட முடியாது - .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை