உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவுதான்: அண்டை நாடுகளை ஒப்பிட்டு லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியல்!

இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவுதான்: அண்டை நாடுகளை ஒப்பிட்டு லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் பட்டியல்!

புதுடில்லி: 'அண்டை நாடுகளுடன் ஒப்பீடுகையில் இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவு தான். 350 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு இந்தியாவில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தூர பயணத்திற்கு பாகிஸ்தானில் 436 ரூபாயும், இலங்கையில் 413 ரூபாயும், வங்கதேசத்தில் 323 ரூபாயும் ரயில் கட்டணமாக உள்ளது' என லோக்சபாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.2025-26 ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி அதிக அளவில் கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தை விட தற்போது 90 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. லாலு பிரசாத் காலத்தில் ஒரே ஆண்டில் 234 ரயில் விபத்துகள், 464 முறை ரயில்கள் தடம்புரண்டன. ஆண்டுக்கு 700 விபத்துகள் ஏற்பட்டன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 395 விபத்துகள் ஏற்பட்டன.மல்லிகார்ஜுன கார்கே ரயில்வே அமைச்சராக இருந்த போது ஆண்டுக்கு 381 விபத்துகள் ஏற்பட்டன. புதிய தொழில்நுட்பம், முதலீடுகளை ரயில்வே துறைக்கு, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஆண்டுக்கு விபத்துகள் 30 ஆக குறைந்துள்ளது. ரயில் தடம்புரளும் சம்பவம் 43 ஆக குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ரயில் கட்டணம்அண்டை நாடுகளுடன் ஒப்பீடுகையில் இந்தியாவில் ரயில்வே கட்டணம் குறைவு தான். 350 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு இந்தியாவில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தூர பயணத்திற்கு பாகிஸ்தானில் 436 ரூபாயும், இலங்கையில் 413 ரூபாயும், வங்கதேசத்தில் 323 ரூபாயும் ரயில் கட்டணமாக உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு.சிறப்பு ரயில்கள்கடந்த ஆண்டு, ஹோலி பண்டிகை காலத்தில், நாங்கள் 604 சிறப்பு ரயில்களையும், கடந்த கோடைகாலத்தில் 13,000 சிறப்பு ரயில்களையும், தீபாவளி மற்றும் சத் பண்டிகையின் போது 8,000 ரயில்களையும் இயக்கினோம். கும்பமேளாவின் போது, ​​ 17,330 சிறப்பு ரயில்களும், ஹோலி பண்டிகை காலத்தில் 1,160 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.10,000 இன்ஜின்கள், 15,000 கி.மீ. தூரத்திற்கு, விபத்தை தடுக்க 'கவாச்' கருவிகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

पड़ाबी
மார் 19, 2025 15:57

ஜெனரல் டிக்ஜெட் வாங்கிட்டு கக்கூசுக்கு பக்கத்தில் உக்காந்து போய்ப்பாரு. ஏழைகளின் வலி, வேதனை புரியும்.


Appa V
மார் 19, 2025 22:49

அதுக்கு பாடிக்கிட்டே ரெயிலில் ஒரு நடை நடந்தா கல்லா கட்டலாமே


nb
மார் 19, 2025 12:23

why not give dynamic refund for every 10 min late arrival at every station?


Varuvel Devadas
மார் 19, 2025 11:28

Our neighboring countries like Nepal supply petrol for around Rs. 30 in India, it is around Rs. 100. Therefore, doing a comparative analysis is not fruitful. I can present many more variables similar to how India is poorly performing, but I do not have time to spend on this.


oviya vijay
மார் 19, 2025 08:20

without ல வந்து இங்கே மாடல் செய்து வருகிறேன் இதைவிட என்னே?...


अप्पावी
மார் 19, 2025 07:54

இவுரு சொல்ற ரேட்டுக்கு டிக்ஜெட் வாங்கி எனரல் கோச்சில் டாய்லெட் பக்கத்தில் உக்காந்துட்டு இவரை போகச் சொல்லுங்க பாப்போம். ஐ.ஏ.எஸ் படிச்சுட்டு பேச வந்துட்டாரு.


A Viswanathan
மார் 19, 2025 16:02

ஐயா,கொரோனாவிற்கு முன் இருந்த சீனியர் சிட்டிசன் களுக்கு கொடுத்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.என்போன்ற முதியவர்கள் அதனால் பயனடைவார்கள்.இதை கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


hariharan
மார் 18, 2025 22:28

அமைச்சர் ஒப்பீடு செய்யும் நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட பொருளாதாரம், வசதிகள், மற்றும் ஏனைய குறியீடுகளில் பின்தங்கிய நாடுகள். இந்தியாவை விட வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்தால் இவர் சாயம் வெளுத்துவிடும். மலேசியாவில் பெட்ரோல் விலை நம் இந்தியா ரூபாயுடன் ஒப்பீடு செய்தால் 42 ரூபாய். அங்கும் பெட்ரோலுக்கு வரி விதிக்கிறார்கள். ஆனால் இந்தியா மாதிரி பற்கொள்ளை இல்லை. கேரளாவில் தமிழ்நாட்டை விட 5 ரூ கூடுதல்.


Senthoora
மார் 19, 2025 05:31

இவர் என்ன சொல்லவருகிறார் என்றால். இந்தியா பொருளாதாரத்தில் பின்னோக்கி போகுதாம். அதான் விலை குறைக்க முடியாதாம்.


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 22:20

ரயில்வேயை தனியாரிடம் விடுவது தான் சிறந்த சேவையை மக்களிடம் கொண்டு வரும்.


V GOPALAN
மார் 18, 2025 21:41

Kilambakkam to Koimbedu Bus fare Rs.40. Stalin should reduce this fare to Rs.10 like local train.


Sriniv
மார் 18, 2025 20:55

What about the fare for First AC, Second AC, Duronto AC, Tejas, Rajdhani, Shatabdi and the dynamic fare pricing on these special premium trains ? These train tickets especially Tejas and Rajdhani are very expensive, almost equal to low-cost airlines. What about Tatkal and the Premium Tatkal ges for AC classes ?


Appa V
மார் 19, 2025 01:16

You should know the salary of Railway officials and staff before writing mindlessly


முருகன்
மார் 18, 2025 20:51

அடுத்த தேர்தல் வர இன்னும் ஜந்து வருடங்கள் இருக்கும் தைரியம் இப்படி பேச வைக்கிறது சாதாரண மக்களின் நிலை தெரியுமா இவருக்கு


Rajan
மார் 18, 2025 21:56

match fare from mylapore to velacheri is Rs 5 return fare Rs 19. whereas in the bus one way it is Rs 20. still min charge in the electric train is Rs 5. Train fare from Chennai to trichy in sf exp is Rs 150. But in the bus Rs 300.


vivek
மார் 18, 2025 23:19

ஷேர் ஆட்டோவில் போகும் முருகனுக்கு எதற்கு கவலை


புதிய வீடியோ