புதுடில்லி: ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 436 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பம் சாராத, முதுநிலை அலுவலர் பிரிவில் (graduate-level posts) 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.சென்னையில் 436 இடங்கள்!
* டிக்கெட் மேற்பார்வையாளர் - 155,* ஸ்டேஷன் மாஸ்டர் - 8,* சரக்கு ரயில் மேலாளர் - 9,* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 169,* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 95,டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்கள்
* டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736,* ஸ்டேஷன் மாஸ்டர் - 994,* சரக்கு ரயில் மேலாளர் - 3,144,* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 1,507,* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 73212ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காலியிடங்கள்!
* கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்- 2,022,* கணக்கு எழுத்தர் மற்றும் டைப்பிஸ்ட்- 361,* ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட்- 990,* ரயில் கிளார்க்- 72,கல்வி தகுதிகள் என்ன?
* வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.* சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.வயது வரம்பு
* டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்களுக்கு 18 முதல் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி
* முதுநிலை அலுவலர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இன்று செப்டம்பர் 14 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20.விண்ணப்பிப்பது எப்படி?
https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்
* விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு கட்டணம் ரூ.250.தேர்வு செய்வது எப்படி?
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.