உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 ரயில் நிலையங்களில் தங்குமிடம்; கூட்ட நெரிசலை தடுக்க ரயில்வே அமைச்சர் திட்டம்!

60 ரயில் நிலையங்களில் தங்குமிடம்; கூட்ட நெரிசலை தடுக்க ரயில்வே அமைச்சர் திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தங்குமிடம் வசதி உருவாக்கப்படும்' என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.புதுடில்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணியர் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 60 பரபரப்பான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தங்குமிடம் வசதி உருவாக்கப்படும். ரயில் நிலையங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் தீர்வு காண ஆலோசனைகள் வரவேற்கப்படும். டில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை. பிளாட்பார்ம் மாறி ரயில் வந்தது கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்காது. விசாரணைக் குழு இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Mediagoons
பிப் 18, 2025 21:19

தங்க இடமில்லாமலா கூட்ட நெரிசல் ஏற்பட்டது ?. அரசு பிரச்சினையயை மறைக்கிறது. தன் கடமையை தட்டிக்கழிக்க பார்க்கிறது.


Bhaskaran
பிப் 18, 2025 18:24

அறிவிப்போடு நின்னுடாதீங்க


அப்பாவி
பிப் 18, 2025 17:28

பாத்தீங்களா.. இப்பல்லாம் ரயில்ல எவன் செத்தாலும், எத்தனை பேர் செத்தாலும் மினிஸ்டர் அலட்டிக்கிறதே இல்லை. இரங்கல், கிரங்கல்னு யாரும் ஒண்ணும் சொல்றதில்லை. ரயில்ல பிறவங்ஜன்னா அவ்ளோ ச்சீப்பா போயிட்டோம்.


V Gopalan
பிப் 18, 2025 15:06

Madurai Station is lacking cleanliness and coach position will not be displayed till the train enters the platform. Passengers are to pay ges train fare but free for cockroaches, rats besides none is monitoring temperature in AC coaches at times too chillness. Until and unless the rules of inconveniencing the co_passengers like talk on high voice, playing music on mobile, no switch off lights beyond 10.00 pm and even taking dinner of family beyond 11.00 pm, no sufficient water in toilets, now more or less un_reserved passengers enter into reserved coaches, TTE will come only beyond 10.00 pm. From Bengaluru to Madurai beyond only one Mysore Tuticorin and Cuddalore port. Whereas countless trains are plying to Kerala. Despite two Ministers, 40MPs are of no purpose of demanding more trains from Bengaluru to Madurai, Mayiladuthurai. If Railwas have sufficient lands at Jolarpet, one more terminal can be made like that of SMWT, no matter passengers will pay their auto fare through their nose. Elite classes can travel Vande Bharat toadurai, with the same fare a common man can utilise the same amount at least two ups & downs. Railways can leave Bullet trains at par with Flight ges, no matter withdrawal of Sr Citizens concession, runing trains not at an affordable cost, if they have lands at far away for terminals all their credits. Since population is on the raise, employees working in Bengaluru and Mysore from Tamilnadu, Railways should have thought over the terminal at SMVT, many trains are shifted, train fare Rs.250.00, auto fare will be Rs 500.00. Totally the services are day by day getting deteriorared.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 12:19

ஒரே டிராக்கில் மூணு ரயில்களை விட்ட ரயில்வே துறை யாச்சே.


Narayanan Muthu
பிப் 18, 2025 11:45

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும். சாலமன் பாப்பையாவின் திருக்குறளுக்கான விளக்கவுரை. மோடி நிர்மலா போன்றவர்கள் திருக்குறளை போற்றுவதை விட்டு ரயில்வே அமைச்சருக்கு திருக்குறள் பாடம் எடுத்தால் நல்லது.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 11:07

கோவை ஸ்டேஷனில் தங்குமிடங்கள் ஏற்கனவே இருக்கின்றன. எர்ணாகுளம் ஸ்டேஷனிலும் இருக்கின்றன.


Narayanan Muthu
பிப் 18, 2025 11:34

அதுக்கும் சேர்த்து லேபிள் ஒட்டிக்கினா போச்சு. என்னாயிடப்போகுது.


பாமரன்
பிப் 18, 2025 11:01

அடடே எலி பொந்துல இருந்து வெளியே வந்திருச்சு போல..???


guna
பிப் 18, 2025 11:41

அதை வெளியே இருக்கும் ஒரு பெருச்சாளி பாத்துடிச்சி போல....


MUTHU
பிப் 18, 2025 10:48

கல்வி வருதோ இல்லையோ, ரயில்வே மாநில பட்டியலில் வந்தால் தான் இதற்கு தீர்வு. அப்பொழுது தான் மக்களுக்கு உண்மை விளங்கும்.


KumaR
பிப் 18, 2025 10:27

தமிழ்நாட்டுல திருட்டு திராவிட விளங்காத மதவாத வெறி புடிச்ச ஆட்சி வந்ததுல இருந்து சட்டம் ஒழுங்கு நாசமா போயிடு இருக்கு.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 11:05

இந்த பதிவுக்கும், இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம். நீ என்ன பைத்தியம் ஆயிட்டே?? 2024 லிருந்து இன்று வரை, 10 மாதங்களில் நடந்த ரயில் விபத்துகள் 52. மரணங்கள் 995. கடந்த 10 வருடங்களில் இது தான் மிகவும் அதிகம். ரயில்வே ஒன்றிய பாஜக அரசின் கீழே இருக்கும் அமைச்சகம். யாரு மதவாத வெறி பிடித்தவர்கள் என்பது தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரியும். சம்பந்தமே இல்லாம உளறுவதை நிறுத்தி விட்டு, பைத்தியம் சரியாக ஏதாவது டாக்டர் கிட்ட போ.


Narayanan Muthu
பிப் 18, 2025 11:37

சம்மந்தமில்லாம கருத்து போடும் இவரின் மனநிலை என்னவாயிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை