உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு செல்லாமல் ரூ.37 லட்சம் சம்பாதித்த அதிகாரி மனைவி: ராஜஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்

வேலைக்கு செல்லாமல் ரூ.37 லட்சம் சம்பாதித்த அதிகாரி மனைவி: ராஜஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தகவல் தொழில்நுட்பத்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றுபவரின் மனைவி, அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றுள்ளார். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.ராஜஸ்தானில் தகவல்தொழில்நுட்பத்துறையின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் பிரதியுமான் தீக்ஷித். இவர் மீதான வழக்கு ஒன்றை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, ஒரியன்புரோ சொல்யுசன்ஸ் மற்றும் ட்ரீஜென் மென்பொருள் கழகம் என்ற இரண்டு நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களை வழக்கமாக எடுக்கும். பிரதியுமான் தீக்சித் பொறுப்புக்கு வந்த பிறகு, அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு, இரண்டு நிறுவனங்களும் தனது மனைவி பூனம் தீக்சித்திற்கு வேலை அளித்து சம்பளம் தர வேண்டும் என நிபந்தனை விதித்தார்.இதனையடுத்து கடந்த 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை பூனம் தீக்சித்தின் 5 வங்கிக்கணக்குகளுக்கு இந்த இரண்டு நிறுவனங்களும் பல தவணைகளில் ரூ.37,54,405 செலுத்தியுள்ளன. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பூனம் தீக்சித் ஒரு நாள் கூட பணிக்கு சென்றதேயில்லை. ஆனால், அவரது கணவர் போலி அறிக்கை மூலம் பூனத்தின் வருகைப்பதிவை உறுதி செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் அரசின் பல ஒப்பந்தங்கள் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சென்றுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

V RAMASWAMY
அக் 28, 2025 10:02

மற்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்க வாய்ப்பு. பல முறைகளில் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்க இது ஒரு முறை.


பிரேம்ஜி
அக் 28, 2025 07:44

படித்து விட்டு கடந்து போகலாம்! அடுத்த ஊழல் என்ன? என்ற எதிர்பார்ப்புடன்!


Ramesh Sargam
அக் 28, 2025 06:59

இந்த வழக்கு வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு செல்லும். அங்கு என்ன நடக்கும்? குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சரிவர நிரூபிக்கப் படாததால், இந்த நீதிமன்றம் அவர்கள் இருவரையும், மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்கிறது என்று விடுவிக்கும்.


V. SRINIVASAN
அக் 28, 2025 12:05

உங்கள் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலம்


மணிமுருகன்
அக் 27, 2025 23:38

பேராசை பெருநஷ்டம் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விட்டது


V.Mohan
அக் 27, 2025 21:05

இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஊழல், லஞ்சங்களை கண்டுக்காமல் விடும் பழக்கத்தை ஆரம்பித்த கட்டுமர கும்பல் லட்சம் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளது. தமிழ் நாட்டு உ.பி.சிட்டிசன்கள் திரும்பத்திரும்ப திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவது அவர்கள் தரும் பணத்துக்காக மட்டுமல்ல, எல்லா லெவல்களிலேயும் லஞ்ச ஊழலை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டு காசு பார்க்கத்தான் 1 சதவீதம் மக்கள் கூட இந்த திராவிட கும்பல்களின் லஞ்ச ஊழலை எதிர்த்து குரல் எழுப்பவோ, போராடவோ மாட்டார்கள். ஏதாவது ஒரு வகையில் இவர்கள் சொல்லித்தந்த ஊழலை வைத்து தான் தமிழக மக்கள் பிழைக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுக்க ஊழல் பணம், ஸ்கூலில் சேர்க்க பணம், ஆயிரக்கணக்கில் வாத்திமார்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும் பிரைவேட் டியூஷன் படிக்க பணம், செல் போன் வாங்க பணம், பைக் வாங்க பணம், காலேஜ் சேர பணம், காலேஜ் பஸ்ஸில் போக பணம், படித்து முடிந்து வேலைக்கு சேர பணம், லஞ்சம் தந்து வாங்கின வேலைக்கு தந்த பணத்தை லஞ்சம் வாங்கி நேர் பண்ண பணம்., மனை வாங்க பணம், வீடுகட்ட லஞ்சம், கரண்ட் வாங்க லஞ்சம், வீட்டு வரி கட்ட லஞ்சம், பத்திரம் பதிவு பண்ண லஞ்சம், இன்னும் பலப்பல இடங்களில், லஞ்சம் பெறவும், லஞ்சம் தரவும் தயாராக உள்ள தமிழ் மக்கள் இத்தனை லஞ்ச ஊழல்களை கண்டு கொள்ளாமலும், தன் ஆதரவாளர்களை தைரியத்துடன் செயல் பட வைத்து தங்களை யாரும் நெருங்காமல் அரை நூற்றாண்டு காலமாக ""கெத்துடன் "" உலா வரும் திமுக மற்றும் தோழர்களை எத்தனை ""விஜய்கள்"" வந்தாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது


V RAMASWAMY
அக் 28, 2025 10:59

Everything is OK except that your version that nothing can be done with DMK is not accep. Take for example the once mighty Congress now KHAN GRESS which has no place in the political arena. Anything can happen to anyone any party. Did AIADMK not defeat DMK?


Krishnamurthy Venkatesan
அக் 27, 2025 20:38

நேர்மையான அதிகாரிகள் இந்தியாவில் இல்லை போலும். இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதுடன், அவர்களின் சொத்துக்களை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.


ராஜா
அக் 27, 2025 20:36

இதுவரை யாருமே கண்டுக்கவில்லை போல


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 19:53

ஆரூரார் இவ்வளவு முட்டுக் கொடுப்பது ஏனோ?


M.Sam
அக் 27, 2025 19:48

இப்போ புரிகின்றதடா டுமிலா வடக்கன் ஏபாநே


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 19:44

ராஜஸ்தான் டபிள் எஞ்சின் சாதனை தான்


முக்கிய வீடியோ