உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஜினி மனைவி ஆஜராக உத்தரவு

ரஜினி மனைவி ஆஜராக உத்தரவு

பெங்களூரு: ரஜினிகாந்த் நடிப்பில் 2014ல், கோச்சடையான் அனிமேஷன் படம் வெளியானது. படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கினார். தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை, 'ஆட் பீரோ அட்வர்டைசிங்' நிறுவனம் மேற்கொண்டது. இந்நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்ததாக லதா மீது, 'ஆட் பீரோ' நிறுவனம், பெங்களூரு ஹலசூரு கேட் போலீசில் புகார் செய்தது. இதன்படி, லதா மீது வழக்கு பதிவானது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி, லதா தாக்கல் செய்த மனுவை, பெங்களூரு 48வது தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஜோதி சந்தனா விசாரித்து, 'மனுதாரர் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதற்கான, எந்தவித நியாயமான காரணத்தையும் குறிப்பிடவில்லை' என்று கூறி மனுவை நிராகரித்தார். மேலும், நவ., 10ல் லதாவை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ