உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வில் பெயிலாகி பிரதமரானவர் ராஜிவ்: மணிசங்கர் அய்யர் கருத்தால் சர்ச்சை

தேர்வில் பெயிலாகி பிரதமரானவர் ராஜிவ்: மணிசங்கர் அய்யர் கருத்தால் சர்ச்சை

புதுடில்லி: '' கேம்பிரிட்ஜ் பல்கலையிலும், இம்பிரீயல் கல்லூரியிலும் தோல்வியடைந்த ராஜிவ் பிரதமராக பதவியேற்றது ஆச்சர்யத்தை அளித்தது,'' என காங்கிரஸ் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் சர்ச்சைக்கு சொந்தக்காரர். அவர் அவ்வபோது தெரிவிக்கும் கருத்துகள், காங்கிரசுக்கு எதிராகவே திரும்புவது வாடிக்கை. இதனையடுத்து கட்சி தலைவர்கள் அவரை கண்டித்துள்ளனர். தற்போது, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாத அவர் அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற டூன் பள்ளியில் மணிசங்கர் அய்யரும், ராஜிவும் கிளாஸ்மேட்ஸ். ஒரே வகுப்பில் படித்தவர்கள்.நீண்ட காலமாக நெருக்கமான நண்பர்கள். தற்போது ராஜிவ் குறித்து மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியை வைத்து காங்கிரசை பா.ஜ., விமர்சித்து வருகிறது.வீடியோவில் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளதாவது: ராஜிவ் பிரதமர் ஆக பதவியேற்ற போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் விமானபைலட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படித்து பெயிலானவர் என நினைத்தேன். இந்த பல்கலையில், பெயில் ஆவது என்பது கடினம். அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதை பல்கலை உறுதி செய்யும். ஆனால், அதனையும் மீறி ராஜிவ் பெயில் ஆனார். இதன் பிறகு லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் பெயில் ஆனார். இதனால், அவரைப் போன்றவர் எப்படி மீண்டும் பிரதமர் ஆக முடியும் என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரசின் தாரிக் அன்வர் கூறியதாவது: பெயிலாவது பெரிய விஷயம் அல்ல. சிறந்த நபர்கள் கூட சில முறை பெயிலாகி உள்ளனர். ஆனால், ராஜிவ் அரசியலில் பெயிலாக வில்லை. பிரதமர் ஆக அவர் சிறந்த வெற்றியை கொடுத்துள்ளார். அவர் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்தார். தகவல் தொடர்பை மேம்படுத்தினார். அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார். ஐந்தாண்டுகளில்இதுபோன்ற சாதனையை படைத்தவர்கள் வெகு சிலரே. இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா கூறியதாவது: காங்கிரசின் மூத்த தலைவரும், நீண்ட காலமாக கட்சியுடன் மணிசங்கர் அய்யர் தொடர்பில் உள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக அவரின் கருத்துகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. செய்திகளில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். கட்சி அவரை எம்.பி., ஆக்கிய போது, ராஜிவை பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கவில்லையா? அவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த போதும், அவரை சோனியா தான் ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்தார். அவரின் அறிக்கைகள், அவர் பா.ஜ.,வின் ஸ்லீப்பர் செல்லோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. பொய் பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ., அவரை பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. அவரை பொது மக்கள் நம்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மணிசங்கர் அய்யரின் இந்த பேட்டியை பார்த்து, காங்கிரசார் அவரை விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajan A
மார் 06, 2025 09:57

ராஜிவ் ஃபெயில் ஆகவில்லைனு பதிலே வரவில்லை. அவர் அரசியலில் தள்ளப்பட்டார் என்றால் கான் கட்சி விசுவாசிகள் தான் காரணம். ஏன் வேற தலைவர்களே இல்லையா?


naranam
மார் 06, 2025 06:45

அவர் மகனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்தாலே இது புரியவில்லையா!


PARTHASARATHI J S
மார் 06, 2025 06:39

பழையதை கிளறி ஆவதென்ன? மாற்றவா முடியும்? ஏதோ அந்த நேரத்திலே கிரகங்கள் அவருக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருக்கும்.


orange தமிழன்
மார் 06, 2025 06:04

ராஜிவ் விருப்பட்டு அரசியலுக்கு வரவில்லை.....காங்கிரஸ் தலைவர்கள் அவர் காலில் விழுந்து கொண்டு வர பட்டவர்.....அது சரி இப்ப எதற்கு இந்த தேவை இல்லாத ஆணி......பப்பு வை பற்றி ஏதாவது???


மால
மார் 06, 2025 04:35

இவன எல்லாம் கடல்ல சுராவனுக்கு போடனும்


தமிழன்
மார் 06, 2025 02:37

காலம் சென்றவர்களை விமர்சிக்க் கூடாது என்ற குறைந்தபட்ச நாகரீகம் கூட இந்தாளுக்கு இல்லையே?? இப்போது இதைப்பற்றி பேசி என்ன பயன் உண்டாகப்போகிறது இந்தாளுக்கு?? இவன் மீண்டும் அவருக்கு தேர்வு எழுத வைத்து பாஸ் மார்க் போடப் போகிறானா?? பாஜக ஏன் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது என்று தெரிகிறதா??


Rajan A
மார் 06, 2025 09:50

அவரை காலம் சென்றவராக்கியர்களுடன் டீ சாப்பிட்டவர்களை என்ன சொல்வது?


Perumal Pillai
மார் 05, 2025 23:50

The only certain and genuine fact about Rajiv Gandhi is the trivial incident of May 21, 1991, while all his other attributes—including those of Sonia Gandhi and Rahul Gandhi—were fake and bogus.


nisar ahmad
மார் 05, 2025 23:49

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள் அதை போல பதவி பவிசு எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு அற்ற நீர் பரவைபோல உண்டகத்துக்கு ரெண்டகம் செய்கிறது.ஆரிய பாசம் துடிக்கிறது.


கல்யாணராமன்
மார் 05, 2025 23:03

அடிக்கடி ஒவ்வொருத்தரும் மோடி கல்வி சான்றிதழ் கேட்டு கோர்ட் வரைக்கும் போகிறார்களே ராஜிவ் படிப்பு சான்றிதழ் கேட்டு ஒருத்தராவது கேள்வி கேட்டனரா?


ராமகிருஷ்ணன்
மார் 05, 2025 22:44

இங்க துண்டுசீட்டு முதல்வர் இருக்கும் போது அங்கு கேம்பிரிட்ஜ் பெயில் இருக்க கூடாதா, இந்த மாதிரியான பொருத்தங்கள் இருப்பதால் தான் பலமான கூட்டணியா இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை