உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா எம்.பி.,யாக எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு

ராஜ்யசபா எம்.பி.,யாக எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் இன்று (ஏப்.,3) பதவியேற்றனர்.ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதில் பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் முருகன் ஆகிய 7 அமைச்சர்களும் அடங்கும்.இவர்கள் 7 பேருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று எல்.முருகன், தர்மஷிலா குப்தா, மனோஜ் குமார் ஜா, சஞ்சய் யாதவ், கோவிந்த்பாய் லால்ஜிபாய் தோலாகியா, சுபாஷ் சந்தர், ஹர்ஷ் மகாஜன், ஜி.சி. சந்திரசேகர், அசோக் சிங் சந்திரகாந்த், ஹந்தோர் மேதா, விஸ்ராம் குல்கர்னி, சாதனா சிங் ஆகிய 12 பேர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றனர். அவர்களுக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் அவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Selvakumar Krishna
ஏப் 03, 2024 14:44

சுத்த மானம் கெட்டவர்களாக இருக்காங்களே, கள்ள தோணியில் ஏறுபவங்களுக்கு தேர்தல் போட்டியிடும் நாடகம் எதுக்கு ?


A1Suresh
ஏப் 03, 2024 14:18

வாழ்த்துக்கள் ஜி undefined பொலிக பொலிக பொலிக தங்கள் சேவை நாட்டிற்கு மீண்டும் தேவை


Nalla
ஏப் 03, 2024 13:58

லோக்சபா எம்பி வேட்பாளர் ஏன் ராஜ்ஜிய சபா எம்பி ஆக பதவி ஏற்க வேண்டும்


Tamil nesan
ஏப் 03, 2024 14:36

இன்னுமா புரியல சார், எல்லாம் ஒரு சேஃப்ட்டித்தான்


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 03, 2024 13:56

ஜூன் நான்காம் தேதி நீலகிரியில் திமுக ராஜாவிடம் மண்ணை கவ்வி டெபாசிட் இழந்து நின்றாலும் இவர் புறவாசல் வழியாக எம்பி ஆகிவிட்டார் ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம்


Sriniv
ஏப் 03, 2024 14:04

ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்து ஆக்கி விட்டார்கள்


Karthikeyan
ஏப் 03, 2024 14:40

ஆண்டிமுத்து ராசா ஹிந்து கடவுளை தப்பாக பேசியதை உங்களை போன்றார் எப்படி ஏற்று கொள்கிறார்கள்


Selvakumar Krishna
ஏப் 03, 2024 14:45

உண்மை


Gopal
ஏப் 03, 2024 15:39

உங்களை போன்ற இருக்கும் வரை தோற்பர்


Gnana Subramani
ஏப் 03, 2024 13:54

எப்படியும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற நம்பிக்கையில் மேலவை உறுப்பினராக padhai aerkiraargal


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி