பலாத்கார சாமியாருக்கு மீண்டும் பரோல் : பிறந்த நாளை கொண்டாட வேண்டுமாம்
சண்டிகர் : தனது பிறந்த நாள் விழாவை கொண்டாட 40 நாளில் பரோலில் வெளியே வருகிறார் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹிம்.ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த 4 ஆண்டுகளில் 13 முறை பரோல் பெற்று வெளியே வந்த நிலையில். கடந்த பிப்ரவரியில் ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பிரசாரம் செய்ய வேண்டி ஜனவரி மாதம் 20 நாட்கள் பரோல் பெற்று வெளியே வந்தார். மீண்டும் ஏப்ரலில் 21 நாள் பரோலில் வெளியே வந்தார். பரோல் முடிந்த நிலையில் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.இந்நிலையில் வரும் ஆக.15ல் தனது 58- வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டி சாமியாருக்கு நிபந்தனையுடன் 40 நாள் பரோல் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.இதுவரை 14 முறை பரோல் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்தாண்டு (2025) மட்டும் மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ளார். இதன் மூலம் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த நாட்களில் இதுவரை 326 நாட்கள் பரோல் வாயிலாக சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.