உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கை நழுவிய ஏர் இந்தியாவை மீட்டெடுத்த ரத்தன் டாடா!

கை நழுவிய ஏர் இந்தியாவை மீட்டெடுத்த ரத்தன் டாடா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம், 68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்திடமே வந்தது ரத்தன் டாடாவை உணர்ச்சி வசப்பட வைத்த தருணம் என்கின்றனர், அந்நிறுவன அலுவலர்கள்.கடந்த 1932ல் 'டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் விமான போக்குவரத்து நிறுவனத்தை ஜே.ஆர்.டி. டாடா எனப்படும், ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா துவக்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. இதன்பின் ஏர் இந்தியா நிறுவனத்தை, அப்போதைய பிரதமர் நேரு, தேசியமயமாக்கினார். விமான போக்குவரத்து சேவையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட, 1990களில் மத்திய அரசு அனுமதியளித்தது. 'மஹாராஜா' சின்னத்துடன் உலகம் முழுதும் வலம் வந்த ஏர் இந்தியா நிறுவனம், நிர்வாக குளறுபடிகள் மற்றும் தனியாருடன் போட்டி போட முடியாத நிலை ஆகியவற்றால் கடும் நஷ்டத்தை சந்திக்கத் துவங்கியது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதில், நாள்தோறும் மத்திய அரசுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சித்தது. பின்னர், ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி கொடுத்து, மீண்டும் அதன் தாய் நிறுவனமான டாடா குழுமமே வாங்கியது. ஏர் இந்தியா நிறுவனம், 58 உள்நாடு, 45 வெளிநாடு என மொத்தம் 103 வழித்தடங்களில் விமான சேவையை இயக்கி வந்தது. 31 நாடுகளில் இதன் விமான சேவை உள்ளது. ஏர்பஸ், போயிங் உட்பட 123 விமானங்கள் உள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் கைக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, 'ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் எங்கள் கைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஏர் இந்தியாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விமான போக்குவரத்து சேவையில் டாடா மீண்டும் முத்திரை பதிக்கும்,' என்று குறிப்பிட்டிருந்தார். டாடா நிறுவனம் ஏற்கனவே 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏர் விஸ்தாரா' என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தையும், 'மலேஷியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏர் ஆசியா' விமான போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதில் மூன்றாவதாக ஏர் இந்தியாவும் இணைந்தது. டாடா குழும முன்னோடி ஜே.ஆர்.டி. டாடாவால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், 68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தங்களிடம் வந்ததை மிகவும் சென்டிமென்ட் ஆக கொண்டாடினார் ரத்தன் டாடா. 'அவரது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்த தருணம் இதுதான்' என்கின்றனர், நிறுவன அலுவலர்கள். 'இப்போது ஜே.ஆர்.டி.டாடா இருந்திருந்தால் மிகவும் அகமகிழ்ந்து போயிருப்பார்' என்று, ஏர் இந்தியா திரும்பக் கிடைத்த தினத்தில் ரத்தன் டாடா கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இராம தாசன்
அக் 10, 2024 19:32

இந்த மாமனிதரை ஓட ஓட விரட்டிய பெருமை நம் தமிழக திருட்டு திராவிட கும்பலுக்கு உண்டு.. தங்கள் தொலைக்காட்சி / கேபிள் நிறுவனத்துக்காக நிதி brothers தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி மிரட்டி தமிழகத்தை விட்டு ஓட விட்டார்கள். நஷ்டம் தமிழக மக்களுக்கு தான்


Palanisamy Sekar
அக் 10, 2024 16:31

டாடா அவர்களின் கைகளில் தவழ்ந்த ஏர் இந்தியா விமானம் கூட சேவையில் உலகத்தில் மிக மோசமான விமான சேவையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துவிட்டது. இன்னும் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஏர் இந்தியா மிக உயர்ந்த இடத்துக்கு செல்லும். சேவையில் சரிவு, ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான் உள்ள இந்த விமானத்தில் பயணிப்பதே உயிரை கையில் பிடித்து பயணிப்பது போலாகும். டாடா வின் திறமைக்கு ஏர் இந்தியா எப்போதுமே சவாலாகவே இருந்துவிட்டது.


Sivagiri
அக் 10, 2024 15:37

தோல்வியே இல்லாத டாட்டாவின் , ஹிஸ்ட்ரியில் , கரையை ஏற்படுத்தியவர் மேற்குவங்க , மமதை அம்மணி - - உலகிலேயே குறைந்த விலை கார் தொழிற்சாலையை நிர்மாணிக்கும் வரை பார்த்துக்கொண்டே இருந்து , முடிவடையும் நேரத்தில் , சீன எபெக்ட்-டுக்கு வளைந்து , ஜிகாதிகளை போராட வைத்து , முழு தொழிற்சாலையையும் தூக்கி கொண்டு வேறு மாநிலத்திற்கு மாற்ற வைத்தார் , அதனால் ஒரு லட்ச ரூபாய் காரை ரெண்டு லட்சத்துக்கு கூட கொடுக்க முடியாத அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் , மமதை ராணி . . .


karthik
அக் 10, 2024 13:53

நேரு ஏர் இந்தியா வை தேசியமயமாக்கவில்லை ... அதை நாசமாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை