உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்;

புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்;

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரை கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ரத யாத்திரையை கண்டு கழித்ததுடன், ஜெகந்நாதரை தரிசனம் செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=62opud7v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், இன்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை கொண்டு செல்லப்பட்டது. 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்படும். இன்று நடந்த ரத யாத்திரையை பார்க்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோலகலமாக நடந்த ரத யாத்திரையை கண்டு கழித்த அவர்கள், ஜெகந்நாதரை தரிசனம் செய்தனர்.புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில்வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.

தறிகெட்டு ஓடிய யானைகள்!

அதேபோல் மேற்குவங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் ரத யாத்திரை விமர்சையாக நடந்து வருகிறது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள காதியா பகுதியில் ரத யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலமும் நடந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர் விசில் ஒலி எழுப்பியதால் ஒரு யானை மிரண்டு அங்கிருந்து மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடியது. பின்னர், யாத்திரையில் பங்கேற்ற யானைகள் தறிகெட்டு ஓடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் பீதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி