உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராதிகா அழைக்கலாம் ஜமீர் அழைப்பது தவறா?

ராதிகா அழைக்கலாம் ஜமீர் அழைப்பது தவறா?

மைசூரு; ''குமாரசாமியை நடிகை ராதிகா, கரியன் என அழைத்தால் தவறில்லை. அமைச்சர் ஜமீர் அகமதுகான் அழைத்தால் தவறா,'' என காங்கிரஸ் தலைவி தேஜஸ்வினி கவுடா தெரிவித்தார்.மைசூரு காங்கிரஸ் அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:நடிகை ராதிகாவிடம், ஊடகத்தினர் 'குமாரசாமி உங்களை எப்படி அழைப்பார், நீங்கள் அவரை எப்படி அழைப்பார்' என, கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த ராதிகா, 'என்னை குமாரசாமி சின்னு என, அழைப்பார். அவரை நான் கரியா என, அழைப்பேன்' என பதில் அளித்திருந்தார்.ராதிகா, கரியன் என அழைத்தால் தவறில்லை. ஆனால் அமைச்சர் ஜமீர் அகமது அழைத்தால் தவறா. இது என்ன நியாயம். அனைவருக்கும் சமமான கல்வி, சலுகைகள், இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் கால் வைக்கும் இந்த காலத்திலும், கருப்பன், வெள்ளையன் என்ற பாரபட்சம் உள்ளது. தீண்டாமை என்பது இன்னும் இருப்பது வெட்கக்கேடு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

karthik
நவ 26, 2024 12:30

காங்கிரஸ் காரர்கள் என்றுமே மூளையோ மூளை சார்ந்து சிந்திப்பவர்களோ கிடையாது என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.. ஏண் அவர் புருஷன் பொண்டாட்டிக்குள்ள எப்படி வேணும்னாலும் கூப்பிடுவாங்க .. இதுக்கும் எவனோ ஒரு அமைச்சர் கூப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்?


Suppan
நவ 20, 2024 16:38

மனைவி கணவனை எப்படி வேண்டுமானாலும் அழைப்பார். அது அவர்களுக்கு இடையே உள்ள புரிதல். இந்திய தலைமுறை பெண்கள் வாடா போடா என்றுதான் பேசுகிறார்கள் .


சமீபத்திய செய்தி