உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்போனுக்கு வாங்கிய கடன் கட்ட தவறினால் போன் முடக்கம்; நிதி நிறுவனங்களை அனுமதிக்க ஆர்.பி.ஐ., திட்டம்

செல்போனுக்கு வாங்கிய கடன் கட்ட தவறினால் போன் முடக்கம்; நிதி நிறுவனங்களை அனுமதிக்க ஆர்.பி.ஐ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடனை திருப்பி செலுத்தத் தவறுவோரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் எனத் தெரிகிறது.செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக 'ஹோம் கிரெடிட் பைனான்ஸ்' ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, டிராய் தரவுகள் தெரிவிக்கிறது.இந்நிலையில், நுகர்வோர் கடனில் பெரும்பகுதி வகிக்கும் செல்போன் விற்பனையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாராக்கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரின் செல்போனை முடக்கும் நடவடிக்கை எடுக்க, நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிகிறது.கடனில் வாங்கப்படும் செல்போனில், இதற்கென, நீக்க இயலாத, செயலி இடம்பெறச் செய்யப்படும். கடனை கட்டத் தவறினால், இதன் வாயிலாக, செல்போன் செயலிழக்கச் செய்யப்படும். இதனால், கடனை திருப்பிச் செலுத்தும் வரை வாழ்வாதாரம், கல்வி, நிதிச்சேவைகளை இழக்க நேரிடும்.அத்தியாவசிய தொழில்நுட்ப வசதியை இழக்கும் அபாயம் காரணமாக, கடன் பெற்றவரின் நிதி ஒழுக்கத்தை அதிகரிக்க இயலும் என கருதப்படுகிறது. எனினும், முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Santhakumar Srinivasalu
செப் 12, 2025 11:17

அப்போ வீட்டுக்கு கடன் கட்டலேன்னா வீட்டை முடக்குவாங்களா?


Barakat Ali
செப் 12, 2025 13:00

பல மாதங்கள் கட்டாவிட்டால் அல்லது செக் பவுன்ஸ் ஆனால், ஏற்கனவே அது மாதிரியான கொள்கை நடைமுறையில் உள்ளது... சிபில் ஸ்கோர் உட்பட பல அம்சங்களை பார்த்துத்தான், பல செக் வைத்துத்தான் வீட்டுக்கடன் வழங்கப் படுகிறது. வீட்டுக்கடனை உங்கள் வங்கிக்கணக்கில் இருந்துஆட்டோ டிடெக்ட் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சந்தேக நிழல் உங்கள் மீது விழும் ....


SANKAR
செப் 12, 2025 20:27

bsnks already doing this.


Elango
செப் 13, 2025 07:24

ஆமாம் அதில் என்ன தவறு இருக்கு


Barakat Ali
செப் 12, 2025 10:59

ஆர்.பி.ஐ., யின் திட்டம் சரியே... பொதுத்துறையில் கடன் வாங்கி ஏப்பம் விடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மீதும் இதே போன்ற அணுகுமுறை இருக்குமா? எதிர்பார்க்கும் அப்பாவி இந்தியன் .....


Sridharan Venkatraman
செப் 12, 2025 10:28

அடேய் கடன் காரா.... கடனை வாங்கி விட்டு ஏப்பம் விட்டவன் நல்லவனா?


visu
செப் 12, 2025 10:06

நல்ல திட்டம் நிறுவனம் EMIல போனை விற்றுவிட்டு செங்கல் அனுப்பினால் நாம் பணம் கட்டாவிட்டால் போனை முடக்கிடுவாங்க திருடியவன் திண்டாடுவான்


Gokul Krishnan
செப் 12, 2025 09:20

பிஸ்னல் நிறுவனத்துக்கு ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டிய லைசென்ஸ் கட்டணம் மற்றும் 1500 கோடி ரூபாய் இதை நான் சொல்ல வில்லை சொல்லியது இந்திய நிதி தணிக்கை நிறுவனம். மத்திய அரசின் எந்த சட்டமும் ஜியோவுக்கு பொருந்தாது


தமிழ் நிலன்
செப் 12, 2025 09:20

அடுத்ததாக நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்காதவர்கள் ஃபோனை முடக்குவதற்கு அனுமதி கேட்பார்கள். அதற்கும் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.


Natarajan Ramanathan
செப் 12, 2025 08:36

இது மிக நல்ல திட்டம். அதுபோல கல்விக்கடன் வாங்கி கட்ட தவறுபவர்களை கைது செய்யவேண்டும்.


கடன்காரன்
செப் 12, 2025 08:31

வேலை வாய்ப்பும் கிடைக்கும். கடனும் வசூலாகும். நுகர்வோர் எக்கேடு கெட்டால் என்ன?


அப்பாவி
செப் 12, 2025 08:29

எதுக்கு கண்டவனுக்கு கடனில் போன் விக்கணும்? அப்புறம் வசூல் ஆகலைன்னு அழுவணும்? கைல காசு கைல மொபைல் தான் பெஸ்ட் பாலிசி.


அப்பாவி
செப் 12, 2025 08:27

செல்போன் வாங்குனவன் TCS வேலைபாத்து, அவனை எந்த முன் அறிவிப்பும் இல்லாம 15 நிமிஷத்தில் கீர்த்திவாசன் வேலய உட்டுத் தூக்கினால் RBI தூரத்தில் நின்னு வேடிக்கை பாக்கும்.


தியாகு
செப் 12, 2025 08:48

அட பேக்கு, டீசல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் தனது வங்கி கணக்கில் மினிமம் பாலன்ஸ் இல்லாமலா வாழ்க்கையை நடத்துவான். அப்படி ஒருவன் இருந்தால் அவன் படித்து என்ன புண்ணியம். படித்து நல்ல வேளையில் இருப்பவன் ஆறு மாத சம்பள தொகையையாவது எதிர்பாராத செலவுகளுக்கு வைத்திருப்பான். அப்படி திட்டமிட்டு வாழாதவன் கட்டுமரத்தின் சமச்சீர் கல்வியை படித்தவனா இருப்பான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை