உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமேதி: நாட்டு நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எந்த விவகாரங்கள் குறித்தும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த டிவியிலும் விவாதத்திற்கு பிரியங்காவும், ராகுலும் தயாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று ( மே 08) அளித்த பேட்டியில், பயனற்ற பிரச்னைகளை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுகிறேன் எனக்கூறியிருந்தார்.இதனை மறுத்து அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: எந்த விவகாரங்கள் குறித்தும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பா.ஜ., உடன் ராகுலும், பிரியங்காவும் விவாதம் நடத்தட்டும். இதற்கான டிவி சேனலை அவர்களே தேர்வு செய்யட்டும். ஒரு பக்கம் ராகுலும், பிரியங்காவும் அமரட்டும். மறுபுறம் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அமருட்டும். அனைத்தும் தெளிவடையும். எங்களது கட்சியை பொறுத்தவரை சுதன்ஷூ திரிவேதி மட்டும் போதும். அவர்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vaduvooraan
மே 09, 2024 18:54

அக்கா-தம்பி ரெண்டு பேருமே கொஞ்சம் உஷாரா இருக்கறது நல்லது ஒரு நாலஞ்சு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்இப்படித்தான் இந்த ஆழ்வார்பேட்டை ஆல்ரவுண்டர் வெவரம் இல்லாமல் ரிபப்லிக் டிவில ஆர்னாப் கோஸ்வாமி நெறியாளராக இருந்த விவாதத்தில் இந்த அம்மாவோட மோதக் கிளம்பி, வியர்த்து விறுவிறுத்து கிட்டத்தட்ட மேடையிலிருந்து ஸ்ட்ரெச்சர்ல படுக்க வெச்சு இறங்குகிற மாதிரி ஆயிருச்சு யூ டியூப்ல தேடினா கிடைக்கும்


Syed ghouse basha
மே 09, 2024 18:26

பிரியங்காவிடம் விவாதம் செய்ய குறைந்த பட்ச தகுதியாவதும் வேணும்


GoK
மே 09, 2024 16:29

அய்யய்யோ இது என்ன வம்பா போச்சுதே நாங்க சும்மா அப்படி இப்படி பேசிட்டு போயிராலுமுனு பாத்தா பட்டிமன்றத்துக்கு கூப்புடுறீங்களே விடுங்க அம்மா நாங்க கெளம்பறோம் வேற பக்கம் போயி வேற புது கத சொல்லறோம்


vijay
மே 09, 2024 15:09

சகோதரன் மற்றும் சகோதரி இருவரும் வாயிலேயே வடை சுடுபவர்கள், வரமாட்டார்கள் வந்து பேசினால் அவர்களின் தரம் தெரிந்துவிடும்


ஆரூர் ரங்
மே 09, 2024 14:15

காங்கிரஸ் சார்பில் கமல்ஹாசனை விவாதத்துக்கு அனுப்பலாம். அவர் பரம்பரை காங்கிரஸ்காரர்.


venugopal s
மே 09, 2024 13:51

இந்த அம்மணி ஒரு குழாயடிச் சண்டை ஸ்பெஷலிஸ்ட்!


Suppan
மே 09, 2024 14:03

விவாததின்பொழுது ஸ்ம்ரிதியின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தாரே அதுதான் நடக்கும்


Duruvesan
மே 09, 2024 15:41

எரியுதா? சொன்ன உடனே?


திகழ்ஓவியன்
மே 09, 2024 12:24

முதலில் உன் திருட்டு certificate விஷயம் என்ன ஆச்சு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை