உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தல் முடிவின் அந்த 10 நிமிடங்கள்! சஸ்பென்சில் பாஜ., காங்கிரஸ் கட்சிகள்

ஹரியானா தேர்தல் முடிவின் அந்த 10 நிமிடங்கள்! சஸ்பென்சில் பாஜ., காங்கிரஸ் கட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவில் பா.ஜ., காங்கிரஸ் இடையே பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் மாறி, மாறி முன்னிலை என்ற நிலைமை, வெறும் 10 நிமிடங்களில் மாறி இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜம்முகாஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரசுக்கு வெற்றி என்று கூறப்பட்டு இருந்தது.இந் நிலையில் அறிவித்தப்படி இன்று ஹரியானா ஓட்டு எண்ணிக்கை மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.மொத்தமுள்ள 90 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 46 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 50 முதல் 55 தொகுதிகளை கடந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பா.ஜ., 20 முதல் 25 தொகுதிகள் வரை முன்னிலையில் நீடித்தது.நேரம் செல்ல, செல்ல பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை காங்கிரஸ் எட்டிப்பிடித்ததாக தொடக்கத்தில் வெளியான முடிவுகள் கூறின. கிட்டத்தட்ட ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒன்றரை மணிநேரம் வரை இப்படித்தான் முடிவுகள் இருந்தன. அதன் பின்னர் காலை 9.45 மணியை கடந்த போது பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான 45 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் 46 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பின்னடைவாக 38க்கும் கீழான தொகுதிகளில் மட்டும் முன்னிலை என்று தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து முன்னிலை நிலவரங்கள் மாறிக் கொண்டே இருக்க, பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்கள் குழம்பி போயினர். கிட்டத்தட்ட 38 தொகுதிகளில் இவ்விரு கட்சிகள் இடையே வெறும் 500 ஓட்டுகள் வித்தியாசம் இருப்பது இதற்கு காரணம். ஹரியானாவில் காங்கிரசுக்கு தான் வெற்றி என்று கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் தேர்தல் முடிவுகளின் நிலைமை அதை பொய்யாக்கலாம் என்ற நிலையே நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sridhar
அக் 08, 2024 13:04

அரவிந்த் கெஜ்ரியோட சட்டை மாதிரி ஆயிடும்


raja
அக் 08, 2024 12:20

ஹா ஹா ஹா அரியானாவில் பிஜேபி ஆட்சி... ஜம்மு காஷ்மீரில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிஜேபி சட்ட சபையில் அதிக எண்ணிக்கை.. சுமார் 28...காங்கிரஸுக்கு வெறும் 9 சீட்டுகளே...


ஆரூர் ரங்
அக் 08, 2024 11:33

ஒருங்கிணைந்த பஞ்சாபில் வெல்வது போகப்போக பிரச்சனையாகும் என்பதை கணித்து தனி ஹரியானா மாநிலத்துக்கு விதை போட்டது இந்திரா காங்கிரசு. இதற்காக சென்சஸ் நடக்கும்போது பஞ்சாபி ஹிந்துக்களை தங்கள் தாய்மொழி ஹிந்திதான் என (மூளைச்சலவை) பொய் சொல்ல வைத்து நிரந்தர வெறுப்பை உருவாக்கியது வரலாறு. இப்போது அதே ஆட்கள் பிஜெபிதான் வெறுப்பு அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்வது வேடிக்கை. ஹரியானா மக்கள் விழித்துக் கொள்ளத் துவங்கிவிட்டனர்.


vidhu
அக் 08, 2024 11:32

வோட்டிங் மெஷின்ல பிரச்சனையைனு ஈசியா சொல்லிடலாம். ஆனா 356 ஷரத் நீக்கின காஷ்மீர்ல ஏன் மக்கள் இப்படி பண்ணிட்டாங்க


ஆரூர் ரங்
அக் 08, 2024 11:47

குழந்தைகளுக்கு கசப்பு மருந்து பிடிக்காது. ஆனால் மூர்க்கர்களை அடக்க அது அவசியமே


ஆரூர் ரங்
அக் 08, 2024 11:24

12 மணியிலிருந்து ராகுல் ஹரியானால EVM EVM ன்னு கதறல். ஆனா காஷ்மீரில் ஜனநாயகம் வென்றது என சோனியா அறிக்கை விடுவார். ஊருக்கு ஒரு பேச்சு.


Duruvesan
அக் 08, 2024 10:44

ராகுலின் ஆப் உடன் கூட்டணி இல்லை என்ற நிலை , பிஜேபிக்கு மறைமுக ஆதரவு. பிஜேபி அதற்கு கைமாறாக ராவுள் சோனியா கேஸ் மொத்தம் கிடப்பில் போடும், நாம பிஜேபி காங்கிரஸ் னு அடிச்சிக்கணும். இங்க தீயமுக அதிமுக பங்காளி மாதிரி அங்க இவங்க


Duruvesan
அக் 08, 2024 10:32

பாஸ் பிஜேபிக்கு 20 இடங்களில் வெற்றி கிட்டும், கட்டாக்கட் 100000 வருஷம் ராகுல் குடிப்பாரு அவங்க அப்பா வீட்டு பணத்தில். இந்த பிஜேபி காரனுங்க சிங்கிள் டீ வாங்கி குடுக்க மாட்டாங்க


கிஜன்
அக் 08, 2024 10:28

முதல் சுற்றுக்களில் எண்ணப்படுவது அரசு ஊழியர் வாக்குகள் மற்றும் போஸ்டல் வாக்குகள் ... அரசு ஊழியர்கள் எப்போதுமே காங் பக்கம் தான் ...


வாய்மையே வெல்லும்
அக் 08, 2024 10:23

இருக்க்கவே இருக்கு தேர்தல் பெட்டிமேலே சந்தேகத்தை கிளப்பி ராவுளு குளிர்காயுவார் பாருங்க மக்களே.. தொரத்தால் தேர்தல் பெட்டிமீது கோபம் ஜெயித்தால் மக்கள் மோடிமீது வெறுப்பு. இதுதான் காங்கிரஸ் தகிடுதத்தம் . புரியாத வர்களுக்கு கூட புரியவைக்கும் எளிய பதிவு இது ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை