மேலும் செய்திகள்
தங்கவயலை காக்க ஐக்கிய முன்னணி
12-Dec-2024
தங்கவயல்: ''தங்கவயல் தொகுதியை பொது தொகுதியாக கர்நாடக அரசு அறிவிக்க வேண்டும்,'' என, கர்நாடக மாநில ரெட்டி சங்க தலைவர் பிரபாகர் ரெட்டி வலியுறுத்தினார்.தங்கவயல் தாலுகா ரெட்டி சமுதாய சங்க கூட்டம் நேற்று நடந்தது. புதிய தலைவராக பிரசன்னா ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், அவர் பேசியதாவது:கோலார் மாவட்டத்தில், ரெட்டி சமுதாயம் பலமிக்கதாக உள்ளது. கர்நாடகாவின் முதல் முதல்வராக பதவி வகித்தவர் கே.சி.ரெட்டி. அவருக்கு கர்நாடக அரசு நினைவு மண்டபம் அமைக்க 10 ஏக்கர் நிலம், 10 கோடி ரூபாய் நிதி வழங்கியதாக அறிவிப்புகள் வந்தன. ஆண்டுகள் கடந்து செல்கின்றன. ஆனால் அந்த நிதி என்னானது. இரண்டு துாண்கள் அமைக்கப்பட்டதே தவிர, வேறொன்றும் நடக்கவில்லை.அரசியல் ரீதியாக ரெட்டி சமுதாயத்துக்கு அநீதி தான் நடக்கிறது. கல்வியிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தங்கவயல் தொகுதியை பொது தொகுதியாக கர்நாடக அரசு அறிவிக்க வேண்டும்.தாலுகா சார்பில் வேமண்ணா ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. ஆனால் அரசு விழாவாக அறிவிப்பதற்கு முன்பிருந்தே, ரெட்டி சமுதாய சங்கம் விழா நடத்தி வருகிறோம். அரசிடம் இருந்து பணம் பெற்றதே இல்லை. வேமண்ணா பவன் கட்ட வேண்டும் என்று தாசில்தாரிடம் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.மாநிலத் தலைவர் பிரபாகர் ரெட்டி பேசுகையில், ''கர்நாடகாவில் 28 மாவட்டங்களில் ரெட்டி சமுதாயம் கணிசமாக உள்ளது. ஆனேக்கல், முல்பாகல், பங்கார்பேட்டை, தங்கவயல் ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக உள்ளது. எங்கள் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு இல்லை. அரசியல் ரீதியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.''ரெட்டி மக்கள் தொகை அதிகரித்துள்ளது. எனவே தங்கவயல் தொகுதியையும் தனி தொகுதியில் இருந்து மாற்றி, பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும். கல்வியில், பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியுள்ளவர்கள் ஏற்றம் பெற எங்கள் சமுதாய சங்கம் உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
12-Dec-2024