உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்

கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புடன் பாம்பு பிடி வீரர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார்.குணா மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் மஹாவர்,42, என்பவர் பாம்பு பிடிக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 15) மதியம், பர்பத்புரா கிராமத்தில் புகுந்து கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை பிடிக்க அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாம்பை பிடித்த நிலையில், அவரது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல போனில் அழைப்பு வந்தது. உடனே, பிடிபட்ட பாம்பை தனது கழுத்தில் சுத்தியபடி, மகனை அழைக்க பள்ளி அருகே சென்றுள்ளார். அப்போது, அவரை பார்த்தவர்கள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அவரும் பாம்பை சீண்டி சீண்டி போஸ் கொடுத்தார். பிறகு மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, பாம்பு தீபக்கின் கையில் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம், பாம்புகளை கையாளும் அனைவருக்கும் ஒரு பாடம். விஷமுடைய பாம்பை பிடிப்பவர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஜூலை 18, 2025 05:29

சிகிச்சையளித்த பின் இறந்திருக்கிறார் அப்பொழுது மருத்துவர்களின் தவறு ஆனால் பாம்பு பிடிப்பவர்களுக்கு பாடமென்று சொன்னால் எப்படி சாமி..


Natchimuthu Chithiraisamy
ஜூலை 17, 2025 17:32

கழுத்தில் சுற்றிக்கொண்டால் பாம்பு பிடி வீரரல்ல. பைத்தியம். மகனை விட்டது புண்ணியம்.


RAMESH
ஜூலை 17, 2025 17:18

பாம்பின் விஷத்தை விட திராவிஷம் மிக மிக கொடியது


Kalyan Singapore
ஜூலை 17, 2025 16:55

பிடித்த பாம்பை அப்பொழுதே பணியில் ஒரு பையில் எடுத்துக்கொண்டு போய் காட்டிலே அவிழ்த்து விட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பர். பாம்புக்கும் அதற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்


வாய்மையே வெல்லும்
ஜூலை 17, 2025 16:10

இதே மரீனா கட்டழகர் ஆக இருந்தால் பாம்பிற்கே லஞ்சம் கொடுத்து அதை வேலை செய்யவிடாமல் மூளையை மழுங்கடித்து இருப்பார். இதாண்டா திராவிட மாடல் இப்பவாவது புரிஞ்சுக்கோங்க


Pandi Muni
ஜூலை 17, 2025 17:34

இவனுங்க பாம்பை விழுந்து கடிக்காம விட்டா போதும்


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 14:55

அழகிய பாம்பிடமும் அழுகிய திமுகவிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


rama adhavan
ஜூலை 17, 2025 17:28

பாம்பு மிக நல்ல ஜந்து. தானாக யாருக்கும் தீங்கு செய்யாது. இவர்கள் அப்படியா?