உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்: நிர்மலா

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்: நிர்மலா

புதுடில்லி: ‛‛ ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம் '' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ukg4kzkw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0*அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் அரசு உறுதியாக உள்ளது.*80 கோடி பேருக்கு இலவச ரேஷன் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.*ஒவ்வொரு வீடுக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் என திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.*சமூக நீதியை அரசின் கொள்கையாக செயல்படுத்தி வருகிறோம். சமூக நீதியை, அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக மாற்றியுள்ளோம்.*ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்.*அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சமையல் எரிவாயு வழங்கி உள்ளோம்* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகள்

*நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம்.*வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் கேஸ் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.*எங்கள் அரசு யாரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாக உள்ளது*மின்னணு வேளாண் சந்தயால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்.*34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.*11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்களினால் பலன் பெற்றுள்ளனர்.*விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

ஐஐடி, எய்ம்ஸ்

*இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது*ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக செயல்படுகிறோம்*பெண்கள் உயர்கல்வி படிப்பது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.*78 லட்சம் தெருவோர வியாபாரிகள் அரசின் திட்டங்களினால் பலன் அடைந்துள்ளனர்.*விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.*10 ஆண்டுகளில் 7 ஐஐடி., 16 ஐஐஐடி., 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைகள், 3000 புதிய ஐடிஐ.,கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. *பிரதமர் காப்பீடு திட்டம் மூலம் 4 கோடி விவசாயிகள் பலன் பெற்றனர்.

தாரக மந்திரம்

*பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டத்தினால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.*பெண்கள் தொழில் துவங்க முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது*அனைத்து துறைகளிலும் சிறு பொருளாதாரம் வலுவுடன் உள்ளது*1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். *சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் - இதுதான் அரசின் தாரக மந்திரம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு

பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், விளையாட்டு துறையில் இளைஞர்கள் புதிய உயரத்திற்கு செல்வதை கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது. சாதனை படைத்த தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். அவர், நடப்பு உலக சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2010ம் ஆண்டில் 20 ஆக இருந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை தற்போது 80 ஆக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

g.s,rajan
பிப் 02, 2024 01:29

Ha....Ha....


Ramesh Sargam
பிப் 02, 2024 00:31

முயன்றால் ஊழலை ஒழிக்கலாம். ஆனால் வாரிசுகளை எப்படி ஒழிப்பீர்கள்? ஒரு வேலை ஒரு சில வாரிசுகள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருந்தால் அவர்களை ஏன் ஒழிக்கவேண்டும்?


Sivagiri
பிப் 01, 2024 23:09

இந்த வருஷ முதல் ஜோக் - ஊழலும் ஜோரா இருக்கு - வாரிசுகளும் - ஜோராத்தான் இருக்காங்க - எப்டி ஒழிக்கிறது ?


theruvasagan
பிப் 01, 2024 22:02

வாரிசு அரசியல் ஒழிப்பு சூறாவளியானது வட இந்தியாவில் மகாராஷ்ட்டிரா பிஹார் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை புரட்டிப் போட்டுவிட்டு மேலும் வலுப்பெற்று தீவிர சூறாவளியாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனுடைய தாக்கம் ஏற்கனவே இங்கு உணரப்பட்டு கிடுகிடுக்கத் தொடங்கி விட்டதாக அரசியல் வானிலை நிபுணர்கள் கணிக்கிறார்கள். அருகே வர வர இன்னும் பதட்டம் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுவிக்கப் பட்டுள்ளதாம்.


Duruvesan
பிப் 01, 2024 20:52

மருமவன் மவன் தங்கச்சி இதுல யாரு முதல் கைது


karupanasamy
பிப் 01, 2024 17:33

திமுகவை கம்பெனியா மாத்திட்டு எல்லா ஊபிசையும் ஷேர் ஹோல்டராக்கிட்டு அப்புறமா வாரிசுங்கல இன்ஸ்டால் பண்ணுலாம்.


Kasimani Baskaran
பிப் 01, 2024 16:50

மாடல் அரசு உச்ச நீதிமன்றத்தில் செலுத்தும் ஆதிக்கமும் கண்காணிப்புக்குள் வர வேண்டும். எப்படி இவர்களால் காப்பி பேஸ்ட் மூலம் தீர்ப்பு வாங்க முடிந்தது என்பதையும் ஆராய வேண்டும்.


முருகன்
பிப் 01, 2024 16:02

பட்ஜெட்டில் குடும்ப ஆட்சி ஒழிப்பு எப்போது சேர்க்கப்பட்டது


ஆரூர் ரங்
பிப் 01, 2024 14:02

கட்சியையே குடும்பக் கார்பரேட் கம்பெனி போல நடத்துவதுதான் நாட்டுக்கு கேடு விளைவிக்கிறது????. லஞ்சப் பணத்தை வெள்ளையாக்க ஓடாத படங்களும் ஹவுஸ்புல், சூப்பர் ஹிட் என்று கணக்கெழுதும் விஞ்ஞான ஊழல் அரசியல் குடும்பங்கள் இங்குள்ளன.


spr
பிப் 01, 2024 13:50

"ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்" செந்தில் இன்னமும் இலாகா இல்லாத அமைச்சராக ஸ்டாலினை மிரட்டிக் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார் பொன்முடியோ தண்டனை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்படாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார் போனது போகட்டும் இவர்கள் இருவரும் அமைச்சர்கள் ஸ்டாலின் விருப்பத்தின் பேரில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கலாம் தண்டனை பெற ஆறுமாதம் அவகாசம் தரலாம் ஆனால் பொன்முடியின் மனைவி ஒரு சாதாரணக் குடிமகள்தானே எதனால் இன்னமும் சிறையிலடைக்கப்படவில்லை மோடிக்கு நேரடியாகப் பொறுப்பில்லை என்றாலும் தொடங்கிய வழக்குகள் இரண்டுமே மாத்திரை அரசின் முயற்சிதானே எனவே இந்த வார்த்தைகள் எல்லாம் பசப்பு வார்த்தைகளே மோடியால் எவரையும் தண்டிக்க முடியவில்லை ஊழல் ஒழிப்பு ?????


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி