உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலங்கார ஊர்திக்கு மறுப்பு : 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம்

அலங்கார ஊர்திக்கு மறுப்பு : 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம்

பெங்களூரு: டில்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் கர்நாடக மாநில அலங்கார ஊர்தி இல்லாததது 7 கோடி கன்னடர்களுக்கு அவமானம் என முதல்வர் சித்தராமையா கூறினார். டில்லியில் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களின் பெருமையை விளக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெறும். சமீபத்தில் தமிழகம் சார்பில் அலங்கார ஊர்தி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகா மாநில அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா எக்ஸ் வலைதளத்தில் கூறியது, கடந்தாண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அலங்கார ஊர்திக்கு அனுமதித்தனர். இந்தாண்டு திட்டமிட்டே அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.மத்திய அரசின் இந்த செயல் 7 கோடி கன்னடர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raa
ஜன 16, 2024 19:49

உங்களையெல்லாம் தேர்ந்தெடுத்த அவமானதைவிட மோசமான அவமானம் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜன 10, 2024 14:10

அலங்கார ஊர்திகள் குடியரசின் அல்லது குடியரசின் பெருமைகளை விளக்குவதாக மட்டுமே இருக்கவேண்டும் சித்து ஜீ .... அரசியல் ரீதியாக இருக்கக் கூடாது .....


Anand
ஜன 10, 2024 10:39

அவிங்க ஏற்கனவே உனக்கு ஒட்டு போட்டதற்கு பெருத்த அவமானத்தில் உள்ளார்கள்...எரிச்சலை கிளப்பதே போயிடு.


Sampath Kumar
ஜன 10, 2024 09:42

ஆட்டம் ரோம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு


பேசும் தமிழன்
ஜன 10, 2024 08:09

சித்து.... முந்தைய கான் கிராஸ் ஆட்சியில் என்ன விதிப்படி நடந்தார்களோ... அதே போல தான் இப்போதைய அரசும் நடந்து இருக்கிறது... அதனால் புதுசாக கம்பி கட்ட வேண்டாம்.


C.SRIRAM
ஜன 10, 2024 05:18

இம்மாதிரி நாசகார அரசியல் வியாதிகளை அடியோடு ஒழித்தல் மட்டுமே நாடு உருப்படும் . தேர்வு குழு ஒரு குறிப்பிட்ட முறையில் ஊர்திகளை தேர்வு செய்கிறது . முன்பு தமிழ் நாடு அரசு ஊர்தியில் உருப்படாத கேடு கெட்ட அரசியல் வியாதிகளை வைத்து அனுப்பியது ... அதுவும் நிராகரிக்கப்பட்டது .எனவே இதில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை . இந்த கேடு கெட்ட அரசியல் வியாதிகள் மட்டுமே அரசியல் செய்கிறார்கள் .


தாமரை மலர்கிறது
ஜன 10, 2024 02:08

இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அலங்கார ஊர்தியை அலங்கோலமாக விட்டுவிட்டார்கள். தனது கையாலாகாத தனத்திற்கு சீதாராம்மையா மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார். எல்லாம் ஸ்டாலினிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயம்.


krishna_dharan
ஜன 10, 2024 00:44

நீங்கள் தேசத்துக்கு எதிரிகளான சோனியா & ராகுல் ஜோக்கார்களை வைத்து ஊர்தி அனுப்பினால் , அது மற்ற 133 கோடி இந்தியர்களுக்கு பெரும் அவமானம்


Ramesh Sargam
ஜன 10, 2024 00:21

நாட்டின் பிரதமரை நீங்கள், பிரதமருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசி அவமானப்படுத்தினால் இதுதான் விளைவு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை