| ADDED : ஜூன் 05, 2024 03:51 AM
புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், புதுமுக எம்.பி.,க்களும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களும் உள்ளனர். வழக்கமாக, தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.,க்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை பழைய பார்லி., கட்டட வளாகத்தில் நடக்கும். அப்போது, காகிதத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.தற்போது, புதிய பார்லி., கட்டடத்தில் நடக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த முறை புதிய மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தகவல்களை பதிவு செய்ய, தனிக்குழுவையும் தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.