உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரி ஆற்றில் 1,30,000 கன அடி நீர் திறப்பு

காவிரி ஆற்றில் 1,30,000 கன அடி நீர் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 741 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் குடகு, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர் திறந்து விடபடும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. தற்போது, 1,30,741 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.கேஆர்எஸ் அணையில் இருந்து 1,00,741 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

ஒகேனக்கல்

தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 95 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:33

நாகை திருவாரூர் மாவட்டங்களுக்கு பலனில்லை. பெரும்பாலான வாய்க்கால்களில் தூர் வாரப்படவில்லை என்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் என்பதெல்லாம் பொய்.


N DHANDAPANI
ஜூலை 27, 2024 07:56

தண்ணீரை திறக்க வேண்டிய காலத்தில் மனம் உவந்து திறந்து விட்டுக் கொண்டிருந்தாலோ அல்லது அறிவுசார் ஆணையம் அறிவித்த பொழுது திறந்து விட்டுக் கொண்டிருந்தாலோ


sundarsvpr
ஜூலை 26, 2024 20:09

நீர் வருவது மகிழ்ச்சியான விபரம். சிக்கனம் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீட்டு கிணறுகளிலும் நீர் நிறைவாய் இருக்கவேண்டும் மறைந்த ஜெயலலிதாவை நினைவில்கொண்டு இயற்கை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தொடர மக்கள் தொண்டு.. அரசு தயவு தேவையில்லை.


N Srinivasan
ஜூலை 26, 2024 20:04

இவ்வளவு தண்ணீரை திறந்து விட யாருக்குதான் மனசு வரும். கோதாவரியை காவேரியுடன் இணைத்துவிட்டு மேகதாது அணை கட்ட விட வேண்டும்


JAINUTHEEN M.
ஜூலை 26, 2024 20:01

டெல்டா மாவட்ட வியசாயப் பெருமக்களின் வயிற்றில் பாலை வார்த்து துயர் துடைக்க உதவிய இறைவனுக்கு கோடாண கோடி நன்றிகள் உரித்தாகட்டும்.


swamy
ஜூலை 26, 2024 19:53

நீடுழி வாழ்க காவேரி தாயே....


Karthikeyan S
ஜூலை 26, 2024 19:52

மகிழ்ச்சி❤️


chennai sivakumar
ஜூலை 26, 2024 19:33

இந்த வருடம் ஆடி பெருக்கு மிக ஜோராக இருக்கும்.


Balaji Kanapathy
ஜூலை 26, 2024 19:24

சிறப்பு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை