உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருகிறது பாரத் ஜிபிடி: ஹனூமான் எனும் ஏ.ஐ மாடலை அறிமுகம் செய்கிறார் முகேஷ் அம்பானி

வருகிறது பாரத் ஜிபிடி: ஹனூமான் எனும் ஏ.ஐ மாடலை அறிமுகம் செய்கிறார் முகேஷ் அம்பானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'சாட் ஜிபிடி', கூகுளின் ஜெமினி போன்றவற்றுக்கு போட்டியாக ஹனூமான் என்ற 'ஏ.ஐ' மாடலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதனை மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளனர்.இந்த நூற்றாண்டில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிவருகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாட்பாட் (chat bot) இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lzg8uu1j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி (BharatGPT) என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக 'ஹனூமான்' என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

g.s,rajan
பிப் 23, 2024 08:00

ஜெய் ஸ்ரீராம் ....


g.s,rajan
பிப் 23, 2024 07:29

இதுக்கும் கடன் வாங்குவாரோ ...???


karthik
பிப் 28, 2024 10:26

அவராவது கடன் வாங்கி தொழில் நடத்துகிறார் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கிறார். ஆனால் தமிழக அரசு எட்டரை லட்சம் கோடி கடன் வாங்கி இலவசம் கொடுக்கிறது.. அது தான் பேராபத்து. போ போயி அறிவை வளத்துக்க


g.s,rajan
பிப் 22, 2024 21:05

ஹனுமான் உலக மகா பணக்காரன் ஆகணும்னு எப்பவும் ஆசைப்படமாட்டார்.....


g.s,rajan
பிப் 22, 2024 20:12

நம்ம நாட்டில் ஏற்கனவே வேலை இல்லாத் திண்டாட்டம் தான் இன்னும் வருங்காலத்தில் அது அதிகமாகும் ,வருமானத்திற்காக வேலை வாய்ப்புக்காக மனிதன் தன்னுடைய போட்டியைத் தானே தயார் செய்வான்....


vnatarajan
பிப் 22, 2024 17:39

வேலையில்லா திண்டாட்டம் வரும்னு சொல்லறாங்களே. உண்மைதானா


Senthoora
பிப் 22, 2024 20:21

ஹனுமான் பெயரை வைப்பது தவறு இல்லை, ஆனால் அவரைப்போல நேர்மையாக, உண்மையாக இருக்கணும், இல்லையேல் அம்போதான்.


g.s,rajan
பிப் 22, 2024 15:14

நம்ம நாட்டு அரசியல்வாதிகள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல்களை முற்றிலும் தவிர்க்க பாடுபட்டு மக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரிப்பணத்தை விரயங்கள் செய்யாமல் தடுக்க ஏ.ஐ அரசியல்வாதிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் ,பல தலைமுறைகளுக்கு சொத்துக்களைக் குவிக்கும் அரசியல்வாதிகளை அறவே ஒழிக்க வேண்டும்.நாட்டின் உயர் பதவிகளுக்கும் மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடிகளில் செலவு செய்யப்படுவதால் அந்தச் செலவுகளைக் குறைக்க மற்றும் அறவே தவிர்க்க ஏ ,ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் .


Barakat Ali
பிப் 22, 2024 13:26

திராவிட மாடலுக்குப் போட்டியாக ஏ ஐ மாடல் துவங்குவதா...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2024 13:18

சாராய ஆலைகள் வைத்துள்ள எங்கள் கட்சிப்பிரமுகர்களுக்கு நாங்க அடிமையா இருக்கோம்... அவர்களை விட பன்மடங்கு அதிகமாக அம்பானி சம்பாதிக்கிறார்... நாட்டுக்கும் பயனுள்ள தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கிறார் ...... இது எங்களுக்கு பொறாமையா இருக்கு .......


Kannan
பிப் 22, 2024 12:45

வாழ்த்துக்கள்


r srinivasan
பிப் 22, 2024 12:41

வாழ்த்துகள். ஆனால், வேலை வாய்ப்பை பறிக்க கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2024 13:17

எண்பதுகளில் கம்பியூட்டர் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பம் வந்தபோது கூட இப்படித்தான் சொன்னார்கள் ...... ஆனால் அவற்றின்மூலம் இன்று கோடிக்கணக்கான பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் ......


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ