உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் சிறைக்காவலை ஏப்.,20 வரை நீட்டித்து டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் என்.சி.பி., என்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக, டில்லியில் இருந்து உணவுப் பொருட்கள் போல, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற, ஜாபர் சாதிக் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33; முஜிபுர், 34, மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7uw7az1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தம், 45, என்பவரும் கைதானார். இவர்கள், சென்னை பெருங்குடியில் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அதற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.,16) நீதிபதி சுதிர்குமார் முன்பு ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் சிறைக்காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karupanasamy
ஏப் 16, 2024 20:28

ஜாபர் க்ரித்திகாவிற்கு ஒரு இடம் புடிச்சு வை


Duruvesan
ஏப் 16, 2024 19:42

அடிச்சி கூட கேட்பாங்க, சின்ன விடியல் பேரை சொல்லிடாதே


எவர்கிங்
ஏப் 16, 2024 15:17

வழக்கு வாய்தா என இழுத்தடிக்காமல் காலா காலத்தில் தண்டனை கொடுத்தாலே நாடு உருப்படும்


Lion Drsekar
ஏப் 16, 2024 15:01

சிறைக்கு சென்றவர் , சிறைக்கு எள்பவர், சிறைக்கு செல்லப்போகுபவர்கள் எல்லோருமே அமைச்சர் பெருமக்களாக இருப்பதால் இவருக்கும் அதே நிலை சீக்கிரமே வரும் இதுதான் ஜனநாயகத்தின் முடியாட்சி தத்துவம் வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 14:11

இவர்களது முக்கிய எஜமானர்கள் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் காத்திருக்கிறது போதைப்பொருள் கடத்தி முழு சமுதாயத்தையும் சீரழிப்பது மனித குலத்துக்கே எதிரான மாபெரும் குற்றம் பல தெற்காசிய நாடுகள் போல இந்தியாவும் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - இல்லை என்றால் போதைப்பொருள் கடத்துவதை ஒரு சாதாரண கடத்தலாக நினைத்து சமுதாயத்தையே சீரழிக்க முயல்வார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை