உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை கொடு : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை கொடு : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களில் சட்டம் ,ஒழுங்கு நிலவரம் குறித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாடு முழுதும் பல்வேறு நகரங்களில், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது. போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது,போராட்டம் நடைபெற்று வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சட்டம் , ஒழுங்கு நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை விரிவான அறிக்கைகளை மாநில, யூனியன் பிரதேச உள்துறை செயலகம் ,, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இ.மெயில், பேக்ஸ், மற்றும் வாட்ச் ஆப் ஆகியவற்றின் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். அதே நேரம் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோல்கட்டாவில் தடை உத்தரவு

கோல்கட்டா போலீஸ்கமிஷனர் வினீத்குமார் கோயல் பிறப்பித்த உத்தரவில் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு நகர் முழுவதும் ( பாரதீய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் 163-ன் கீழ் ) தடை உத்தரவு பிறப்பிக்கப்ப்டடு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian Srinivasan
ஆக 18, 2024 21:43

மம்தா முன் யோசனையின்றி முடிவெடுப்பவர்.கம்யூனிஸ்ட் ஆட்சி நானோ,தயாரிக்கடாடாவுக்குஇடம்பிரச்னையில் கவிழ்ந்தது.ஒரு பெண் ஆட்சியில் பெண் பலாத்கார கொலையில் ..?


தமிழ்வேள்
ஆக 18, 2024 09:06

ஜிஹாத் கும்பல் தேசவிரோத கும்பலை அடக்க மீண்டும் கழுவில் ஏற்றி கொல்லும் மரணதண்டனை முறை கொண்டு வர வேண்டும்....


VENKATASUBRAMANIAN
ஆக 18, 2024 07:43

இதற்கும் ஆர்எஸ்பாரதி ஊடகங்களில் முட்டு கொடுக்கிறார்கள். கேவலமான ஜென்மங்கள்


rajan
ஆக 18, 2024 07:33

மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு 356 பயன்படுத்த சொன்னீரா இல்லையென்றால் ஏன் சொல்லும்


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:26

குண்டர்களை வைத்து அணைத்து ஆதாரங்களையும் அழித்தபின்னர் விசாரித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. அணைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்களை வைத்து கண்காணிக்க வேண்டும். அகால நேரங்களில் பணி முடிந்தால் வீட்டில் பத்திரமாக கொண்டு விட போக்குவரத்து வசதிகளை அரசே ஏற்படுத்த வேண்டும் .


Lion Drsekar
ஆக 18, 2024 07:19

கொடுத்து ? ஆளும்கட்சிக்கு இவர்கள் மாம்பழம் வருகிறது , எதிர்க்கத்திகளுக்கு அண்டை எதிரி நாட்டில் இருந்து மாம்பழம் வருகிறது செஞ்சோற்றுக்கடன் ? யார் யார்மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் . துருக்கியில் சம்பவம்தான் இன்று உலகம் முழுவதுமே நடக்கிறது . சிறைச்சாலைகளில் இருப்பவர்களின் நலனில் காட்டும் அக்கறை மக்கள் மீது காட்டினாள் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


K.SANTHANAM
ஆக 18, 2024 06:28

சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்கு உடனடியாக வேலை வழங்கிய மாநில அரசை கலைக்க வேண்டும். காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு மாநில உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும்.


Jysenn
ஆக 18, 2024 05:30

356 in WB is the only solution but this spineless central government headed by modi is incapable of doing it.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி