உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்: இந்தியா பதிலடி

போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாக்., தாக்குதல்: இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wu2zecu3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது. பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாக்., ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.நக்ரோட்டாவிலும் பாக்., அனுப்பிய டுரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.குஜராத்தின் கட்ச் பகுதியில் பல டுரோன்கள் வந்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் டுரோன் காரணமாக மின்தடை அமல்படுத்தப்பட்டது. பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.அமிர்தசரஸ் பகுதியில் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.ஒப்பந்தம் மீறல்!இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், ' இன்று( மே 10) மாலை போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது,' என தெரிவித்தன.ஆலோசனைஇந்நிலையில், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது தொடர்பாக பிரதமர் மோடி

உமர் அப்துல்லா கேள்வி

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது; சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர் , பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Dharmavaan
மே 11, 2025 08:07

மோடி போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது


R SRINIVASAN
மே 11, 2025 06:59

1965-il இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வந்த பொழுது இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களிலும் ,ஏன் தமிழ்நாட்டில் கூட blackout செய்ய உத்திரவு வந்தது. ஜவஹர்லால் நேரு தேவையில்லாமல் காஷ்மீர் பிரச்சனையை ஐ .நா சபைக்கு கொண்டு சென்றார். அதனால்தான் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானும் ,சீனாவும் பிடித்துக்கொண்டன. காங்கிரஸ் இந்த தேசத்துக்கு செய்த த்ரோகத்தினால் இன்று இந்தியா மக்கள் தீராத துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பி.ஜே.பி யை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டுக்கு துரோகம் செய்யாதீர்கள்.


Mahesh Rajayya
மே 11, 2025 02:47

If Modi is smart, he should occupy Pakistani Kashmir with this war. What did we get out of this war? Killing terrorists not enough. We need our land back that Nehru donated for free


sridhar
மே 11, 2025 06:35

In today’s world relationship between two countries cannot be viewed in isolation. World opinion matters. The blunder of 1948 cannot be rectified so easily .


Padmasridharan
மே 11, 2025 01:17

கல்யாணா ஒப்பந்தத்தையே தலாக் சொல்லி மீறும் மக்களிடம் போர் நிறுத்திட்டேனு சொன்னா எப்படி இருக்கும்


பா மாதவன்
மே 11, 2025 00:42

போர் நிறுத்தம் வேண்டும் என்று அவர்கள் விரும்பியது நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அல்ல. அவர்களுக்கு வேண்டிய ஆயுதம் சீனா, துருக்கியிலிருந்து வருவதை உடன் பாதுகாப்பாக இறக்கி வைத்து மீண்டும் போருக்கு தயாராக இருப்பதற்காக தான். நயவஞ்சகர்கள். திருந்த மாட்டார்கள். நன்கு அவர்களை அடித்து துவம்சம் செய்து அவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை தேடி கண்டுபிடித்து முதலில் அவைகளை செயலிழக்க செய்ய வேண்டும். பாகிஸ்தான் பிடியில் இருக்கும் காஷ்மீர் இடத்தை மட்டும் நமதாக்கி கொண்டு அங்கிருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவிய அந்த மக்களும் தீவிரவாத குணம் கொண்டவர்கள் தான். அவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டி விட வேண்டும். இல்லாவிடில் நம் நாட்டில் அரசியல்வாதிகள் போர்வையில் நாட்டிற்கு எதிராக ஊளையிடும் சில நரிகளுடன் சேர்ந்து அவர்களும் கூட்டு சதி செய்ய முற்படலாம் என்ற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. அல்லது நம் நாட்டு விசுவாசிகள் பலருக்கு அங்கு வீடு கட்டி கொடுத்து அவர்களை அங்கு குடி அமர்த்த வேண்டும். நல்ல திறமையான நம் இராணுவ படைகளுக்கும், அதன் சிறந்த தலைமைக்கும், நம் நாட்டின் பெருமைமிகு தலைமைக்கும் அடியேனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பாராட்டுதல்கள்.


RAMAKRISHNAN NATESAN
மே 11, 2025 00:09

DGISPR Ahmed Shareef Chaudhry is the son of a UN and US designated global terrorist Sultan Bashiruddin Mahmood. His father provided Osama Bin Laden information about chemical, biological and nuclear weapons.


பல்லவி
மே 11, 2025 00:08

நம்ப முடியாத ஒரு நாடு அந்த ஸ்தானம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் சொல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டார்கள்,


Ganesh
மே 10, 2025 23:53

சார், இந்த சீனா ட்ரோன் நேத்து நைட் லாஹோர் ல இருந்து அனுப்புனது இப்போ தான் இந்தியா பார்டர் வந்தது..... பாகிஸ்தான் புதிய தகவல்....


Priyan Vadanad
மே 11, 2025 00:54

சூப்பர்லேட்டிவ் கமெண்ட். வாசித்தவுடன் வாய்விட்டு சிரித்தேன்.


GMM
மே 10, 2025 23:41

போர் நிறுத்தம் யாருடன்? பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள். மூன்றும் ஒன்றுக்கு ஒன்று கட்டுப்படாது. டிரம்ப் யாருடன் பேசினார்?


Padmasridharan
மே 11, 2025 01:20

கல்யாண ஒப்பந்தத்தையே தலாக் சொல்லி மீறும் நபர்களிடம் போர் ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் காண்பித்து இருக்கிறார்கள்.


Anantharaman Srinivasan
மே 10, 2025 23:28

பாகிஸ்தான் அவன் புத்திய காண்பிச்சுட்டான். போர் நிறுத்தமென்று சொல்லி நாம் அசந்து ஏமாந்திருந்தால் நாசம் செய்ய ஒரு முயற்சி. இனி தயவு தாட்சண்யம் காட்டவே கூடாது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து துவம்சம் செய்ய வேண்டியது தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை