தனியாரிலும் இடஒதுக்கீடு!
தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்காக, தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை விரிவாக்க வேண்டும். இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இது நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ராகுல்m லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்காஷ்மீர் முழுதும் நமதே!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும். இது நடக்கவில்லை என்றால், நாம் மேலும் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தோட்டாவுக்கு தோட்டாவால் பதிலடி என்பதே பயங்கரவாதிகள் விஷயத்தில் நம் அரசின் நிலைப்பாடு. போர் நிறுத்தம் தற்காலிகமானது தான்.ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி பிரதமர் மறுக்க வேண்டும்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகத்தை முன்வைத்து அச்சுறுத்தி போரை நிறுத்தியதாக கூறியது அதிர்ச்சியளிக்கிறது. இதை பிரதமர் மறுக்க வேண்டும். இந்தியாவையும், பாகிஸ்தானையும் டிரம்ப் ஒரே தளத்தில் வைப்பது, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்குவது நமக்கு நல்லதல்ல.சச்சின் பைலட், பொதுச் செயலர், காங்கிரஸ்