உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி: 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kfv2zoex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெப்போ ரேட் வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைந்துள்ளது. 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் வங்கி சேவைகளில் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
பிப் 07, 2025 19:40

வளர்ச்சி குறைஞ்சா இப்பிடித்தான் எல்லா நாட்டிலும் செய்யறாங்க.


A.Gomathinayagam
பிப் 07, 2025 14:03

வங்கிகள் சேமிப்புகளுக்கு அளிக்கும் வ ட்டி விகிதம் குறையும் ,வட்டியையை வைத்து வாழும் முத்த குடிமக்கள் வருமானம் குறையும்


Narayanan Muthu
பிப் 07, 2025 13:34

எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலையில் பிஜேபி அரசு. சரிந்து போன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ரெப்போ வட்டிவிகிதம் குறைப்பு என்ற மாயாஜால செயல். இதெல்லாம் நிதி அமைச்சகத்தின் தோல்வியை பறை சாற்றுகிறது.


Duruvesan
பிப் 07, 2025 14:54

இதோட வந்துட்டாரு எகானாமிஸ்ட், பொருளாதார சரிவு, முத்து குடும்பத்துடன் பிச்சை எடுக்கிறார். அதுக்கு தான் விடியல் ஓசி பஸ் ,கலைஞர் உரிமை தொகை கொடுக்கிறார்


Suppan
பிப் 07, 2025 15:08

முத்து இது ரிசர்வ் வங்கியின் செயல். நிதி அமைச்சகத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றுகூட தெரியாமல் புலம்புகிறீர்களே


ManiK
பிப் 07, 2025 12:29

காலத்துக்கு ஏற்ற சரியான முடிவு. வருமான வரி குறைந்து சேமிக்கும் பணத்தை வீடு, வாகனம், தொழிலில் முதலீடு செய்ய, இந்த வட்டி குறைப்பு பயனுள்ள ஈர்ப்பை ஏற்ப்படுத்தும். ஆனால் சம்பந்தம் இல்லாத அந்த ரகுராம்ராஜன் என்னதையாவது கிளப்பிவிடுவார் பாருங்க!!.


அப்பாவி
பிப் 07, 2025 11:44

பதவிக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது. பா.ஜ ஆளுங்க மாதிரியே தானே பெருசா சாதிச்சுட்ட மாதிரி பேசுறாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை