உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல கட்டுப்பாடு விதிப்பு

 நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல கட்டுப்பாடு விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: 'ஆன்லைன்' முன்பதிவு அல்லது 'ஸ்பாட் புக்கிங்' கூப்பன்கள் இல்லாமல், நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே, அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நெரிசலை தவிர்க்க ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20,000லிருந்து, 5,000 ஆக குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் கூட்டம் அதிகமாக உள்ளது. நவ., 23-ல் அதிகபட்சமாக, ஒரு லட்சத்து 17,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த சீசனில் நேற்று காலை வரை, ஒன்பது லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகரித்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் கூப்பன் இல்லாத பக்தர்கள், பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு நாளுக்கான ஸ்பாட் புக்கிங் முன்பதிவு முடிந்து விட்டால், அடுத்த நாள் கூப்பன் எடுத்த பின்னரே தரிசனத்திற்கு செல்ல முடியும். அதுவரை நிலக்கலில் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை