உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடனே உங்க நாட்டுக்கு திரும்பி போங்க: அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினருக்கு பாகிஸ்தான் உத்தரவு

உடனே உங்க நாட்டுக்கு திரும்பி போங்க: அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினருக்கு பாகிஸ்தான் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானில் அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும். எங்களின் நிலமும், வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்'' என பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்து உள்ளார்.ஆப்கனில் உள்நாட்டு போர் வெடித்த போது ஏராளமான மக்கள் பாகிஸ்தானில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். இப்படி பல லட்சம் பேர் வந்து குவிந்ததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளான பாகிஸ்தான் அரசு, அவர்களை திருப்பி அனுப்ப பல்வேறு வேலைகளை செய்கிறது. அந்த வகையில், ஆப்கனில் இரண்டாம் முறையாக தலிபான் ஆட்சி அமைந்த பிறகு, பலர் தாயகம் திரும்பியுள்ளனர். ஐநா அகதிகள் அமைப்பின் செப்டம்பர் மாதம் கணக்குப்படி 15 லட்சம் ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இன்னும் பாகிஸ்தானில் 23 லட்சம் பாகிஸ்தானில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.அவர்களில் 13 லட்சம் பேர் அதிகாரபூர்வமாக அகதிகள் அடையாள அட்டை வைத்து இருக்கின்றனர். மீதமுள்ள 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இதற்கிடையே, தற்போது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுடன் அனைத்து உறவுகளும் முடிந்து விட்டது. பாகிஸ்தானில் அகதிகளாக வசிக்கும் ஆப்கன் நாட்டினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும். எங்களின் நிலமும், வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம். எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கன் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு கவாஜா ஆசிப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Babu
அக் 18, 2025 22:54

நீங்க அகதிகளை வெளியேற சொல்றீங்க. இதை தான் நாங்க சொல்றோம் எங்க ஊர்லே சட்ட விரோதமா இருக்கிற உங்க சொந்தக்காரங்ககிட்ட. ஆனா எங்க ஊர்லே இருக்கிறவங்க வேற விதமா பேசுறாங்க. உமது வினை உம்மை சுடுகிறது இப்பொழுது.


jss
அக் 18, 2025 20:58

சாத்தான் வேதம் ஓதுகிறது. முதலில் பயங்கரவாத்த்தையும் தீவிரவாத்த்தையும் நீ நிறுத்து பிறகு ஈப்கன் பற்றி பேசலாம். ஆக்கரமிப்பு செய்த காஷமீரை விட்டு நீ ஓடு. பிறகு ஆப்கானியர்களை சொல்லலாம்


MARUTHU PANDIAR
அக் 18, 2025 20:17

இப்படி தான் நம்ம கிங் பின் அமைச்சராக இருந்த போது பங்களா தேஷ் காரனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டாப்ல . இப்போ அவனுவளுக்கு வாக்குரிமை கொடுத்தே தீரணும்னு ஒத்தக் கால்ல நிக்கறாப்ல. என்ன த்தைச் சொல்ல?


MARUTHU PANDIAR
அக் 18, 2025 19:17

அதில் இன்னொரு விஷயம். ஆப்கான் வடக்கு எல்லை பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லை மிக நெருக்கமாக உள்ள ஒரு பகுதியாகும். நிச்சயம் அந்த புள்ளி வழியாக ஆப்கான் அகதிகள் தானாகவும் பாக்.கால் திட்டமிட்டு ஊடுறவ வைத்தும் சகட்டு மேனிக்கு இங்கு நுழைந்து விடுவார்கள். பிறகு இனப்பெருக்கம்.


Rameshmoorthy
அக் 18, 2025 17:25

Where is Satya raj, Prakash raj, and others??? Let us send all Rohingya and Bangladeshi to their countries


HoneyBee
அக் 18, 2025 17:21

அதை நீ சொல்ற. எல்லா இடங்களிலும் உங்க ஆட்கள் எவ்வளவு அட்டகாசம் செய்றாங்கன்னு போய் பாரேன்


Field Marshal
அக் 18, 2025 17:13

பெரும்பாலான பிசினஸ் ஆப்கனிஸ்தான் அகதிகள் கையில் ..இவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரேஷன் கார்டு ..டிரைவிங் லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள்


Rajarajan
அக் 18, 2025 16:58

அப்படிவா வழிக்கு. தலைவலியும், காய்ச்சலும், தனக்கு வந்தால்தான் தெரியும். இப்போ என்னபண்றீங்க, உடனடியா ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்க. உங்க விரலை வெச்சே, உங்க கண்ணை குத்தினா தான் சரிப்பட்டு வரும். கூட்டு பஞ்சாயத்த, எழுது தீர்ப்ப.


Venugopal, S
அக் 18, 2025 16:25

ஐரோப்பா முழுவதும் உங்க ஆளுங்க சட்ட விரொதமா தங்கி இருக்காங்க. உன் நாட்டில் தீவிர வாதிககளை தவிர வேறு ஒருத்தனும் இல்லை


KOVAIKARAN
அக் 18, 2025 15:44

அப்படியே காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து நீங்கள் மொத்தமாக உடனைடியாக வெளியேறுங்கள். ஏனெனில், அது எங்கள் இந்திய நாட்டிற்கு உரிமையான எங்களுக்கு சொந்தமான பகுதி. கவாஜா அவர்களே, இப்போது தெரிகிறதா நீங்கள் உருவாக்கி, வளர்த்து எங்கள் எல்லைகளுக்குள் திருட்டுத்தனமாக அனுப்பிய உங்களது தீவிரவாதிகளின் செயல்கள் எங்களுக்கு எப்படி வலித்தது, இன்றும் வலிக்கிறது என்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை