உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்கள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்கள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

புதுடில்லி: '' நாம் பொது மக்களின் நலன், உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் அவர்களுக்கு கடமைப்பட்டவர்கள்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார்.அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பேசியதாவது: நீதித்துறையின் பங்கு, ஜனநாயகத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. இதற்கு அரசியலமைப்பு வகுத்துள்ள வழிகாட்டுதல்களால் மட்டுமே அது சாத்தியமானது. நீதிபதியின் பங்கு என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. ஒவ்வொரு தீர்ப்பும் வெற்றியாளர் மற்றும் தோல்வியாளர்களை உருவாக்கும். சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அழைக்கவும், மற்றவர்கள் விமர்சனம் செய்ய தூண்டவும் செய்யும். சிலருக்கு இந்திய அரசியலமைப்பு நீதிமன்றங்கள் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவை. மற்றவர்களுக்கு நாம், அரசியலமைப்பு கடமைகளில் இருந்து விலகி இருக்கிறோம். அரசியல் சாசனம், தேர்தல் செயல்முறை மாற்றங்களில் இருந்து நீதித்துறையைப் பாதுகாக்கிறது. முடிவுகள் நியாயமானவை என்பதை உறுதி செய்கிறது.அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை நீதித்துறை செயல்படுகிறது. நாம், அரசியலமைப்பு கடமைக்கு கட்டுப்பட்டு உள்ளோம். அதேநேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். இதன் மூலம் நமது கவனம் பொது மக்கள் நலனிலும், அவர்களின் உரிமையை பாதுகாப்பதிலும் இருக்கிறது. நாம், பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். நமது தன்னாட்சி மற்றும் பொறுப்பை உணர்ந்து இருக்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

NATARAJAN R
நவ 27, 2024 19:30

உங்கள் கருத்துக்களை நாங்கள் நல்ல நகைச்சுவையாகவே பார்க்கிறோம். உங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பல உதாரணங்களை குறிப்பிட முடியும். திரு பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை உறுதி செய்து பதவி பறிப்பு செய்தது. உங்கள் உச்சநீதிமன்றம் எந்த விதமான விசாரணையும் இல்லாமல் அதற்கு ஏன் தடை விதித்தது? மற்ற அமைச்சர்களின் வழக்குகளை கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை ஆரம்பித்த உடன் உங்கள் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்தது. செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காது என்று அறிந்து அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். உங்கள் உச்சநீதிமன்றம் உடனே ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். ஜாமீன் கிடைத்தது உடனே அமைச்சர் பதவி ஏற்றார் . இவர் செல்வாக்கு மிக்க அமைச்சர். தமிழ் நாட்டில் இவருக்கு எதிராக யார் சாட்சி சொல்ல முடியும்? இந்த சிந்தனை கூட இல்லாமல்தான் உங்கள் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. திரு உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்க வேண்டும் என்று பேசிய வீடியோ ஆதாரம் தந்தும் அதை பார்த்து விட்டு வழக்கை மாதக்கணக்கில் தள்ளி வைக்கிறது உங்கள் உச்ச நீதிமன்றம். மக்கள் கருத்து என்பதை மேற்படி வழக்குகளில் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை. இது போல் தத்துவம் எல்லாம் பேச வேண்டாம்.


Dharmavaan
நவ 27, 2024 07:23

முதலில் உண்டான அரசியல் அமைப்பு கொலீஜியும் முறையை உண்டாக்கியதா .சட்டப்படி அது செல்லுமா


Hajamohaideen
நவ 27, 2024 06:43

பொதுமக்கள் நலன் கருதி நீதித்துறை வேலை செய்கிறதா? நியாயமாக தீர்ப்புகள் உள்ளதா? காலம் தாழ்த்தாத தீர்ப்புகள் உள்ளனவா? பாகுபாடு அற்ற தீர்ப்புகளாக இருக்கிறதா? மனசாட்சியை கேட்கவும். கடவுளை கேட்டு தீர்ப்பு என்ற கதைகள் எதற்கு?


அப்பாவி
நவ 27, 2024 04:33

ரிடையர்மெண்ட்டுக்கு இன்னும்.கொஞ்ச நாள் இருக்கு போலிருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை