6 மணி நேர பரோலில் வந்து திருமணம் செய்த ரவுடி
புதுடில்லி:பிரபல ரவுடி சந்தீப் என்ற கலா ஜாதேடி - அனுராதா சவுத்ரி திருமணம், துவாரகாவில் நடந்தது. ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேந்த சந்தீப், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். ஒருகட்டத்தில் இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 7 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீஸ் அறிவித்து இருந்தது.கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தீப் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அனுராதா சவுத்ரி ஆகியோருக்கு உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதற்காக, சந்தீபுக்கு டில்லி நீதிமன்றம் ஆறு மணி நேரம் 'பரோல்' வழங்கியிருந்தது.