உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மிரட்டல் விடுப்பது சகஜமாகிவிட்டது.ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 14ம் தேதி வரை 999 வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அக்டோபரில் மட்டுமே 666 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது. இதுபோன்ற மிரட்டல்கள் விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது பயணிகளுக்கு பெரும் தலைவலியாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அது விளையாட்டாகவோ அல்லது ஏதேனும் உள்நோக்கத்துடனோ விடுத்தால் அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி ரூ.1.லட்சம், ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Santhakumar Srinivasalu
டிச 18, 2024 20:36

குறைந்த பட்சம் 15 வருடங்களுக்கு தண்டனை தான் நல்லது!


visu
டிச 18, 2024 14:58

1 கோடி ரூபாய் கைல வெச்சிருக்கவன் ஏன் விமானத்துக்கு மிரட்டல் விட்டுட்டு இருக்க போறான் ? அதைவிட 10 வருட சிறை என்று அறிவியுங்க .அதுக்கு மேல கடும் குற்றவாளிகளை சிறையில் அடைத்து பிரியாணி போடாமல் கடுமையான உடல் உழைப்பு உள்ள சாலை போடுவது போன்ற வேலைகளுக்கு பயன் படுத்துங்க


Ravichandran
டிச 18, 2024 14:08

முதல்ல ஆளை கண்டு பிடிக்கப் பாருங்க அதுவே முடிய வில்லை கேசு அப்புறம் போடலாம்.... நான் சொல்ல நினைச்சேன்...... நீங்கள் சொல்லிவிட்டீர்கள் .....


RAAJ68
டிச 18, 2024 12:38

ஒரு கோடி அபராதம் அல்லது ஆயுள் தண்டனை என்று சட்டம் கொண்டு வரவும் ஏனென்றால் எல்லோராலும் ஒரு கோடி கட்ட முடியாது.


Barakat Ali
டிச 18, 2024 11:02

இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி ரூ.1.லட்சம், ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்... ரொம்ப அறிவார்ந்த துறையா இருக்கே... ஆளைப் புடிச்சாத்தானே அபராதம் கட்டச்சொல்லுவீங்க... ஒருவேளை.. ஆன்லைன் ல கட்டிட்டு தங்கம் ன்னு போன்லேயே கொஞ்சுவீங்களோ ??


visu
டிச 18, 2024 14:59

ஆளை பிடிச்சாலும் கைல 1 கோடி இருக்க வேண்டாமா இருந்தா அவன் ஏன் இந்த வேலைய பக்க போரான்


chennai sivakumar
டிச 18, 2024 10:18

பேசாமல் தாமதம் செய்யாமல் தொங்க விடுவதுதான் சரி


R S BALA
டிச 18, 2024 10:11

அபராதம் கட்டிவிட்டுதான் அடுத்த வேலை... அட போங்க சார்..


சாண்டில்யன்
டிச 18, 2024 10:05

அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் எனும்போது அபராதம் அதைவிட குறைவாக விதிப்பது சரியா? அதைப்போல இரண்டு மடங்கு விதிப்பதே சரியாக இருக்கும். அதை கட்டத் தவறினால் வாழ்நாள் சிறை என்றிருக்கலாம். தூற்றுவது அடுத்தவர்களை தூற்றுவது கேவலமாக பேசி சித்தரித்தல் பெரும் விளைவுகள் ஏற்படுமென்று மிரட்டுவது எல்லாம் எல்லா நிலை மாந்தர்களிடமும் சர்வசகஜமாகிப்போனது எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படும் காலமிது. அதையும் பாராபட்சமின்றிச் செயல்படுத்த அரசு உறுதிபூண வேண்டும்


A R Balakrishnan
டிச 18, 2024 09:47

மூன்று கோடி அபராதம் அகட்ட தவறினால் 2 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்


பிரேம்ஜி
டிச 18, 2024 10:13

முதல்ல ஆளை கண்டு பிடிக்கப் பாருங்க! அதுவே முடிய வில்லை! கேசு அப்புறம் போடலாம்!


Barakat Ali
டிச 18, 2024 11:03

சிறைக்கு ரெடியா இருப்பவன்தான் மிரட்டலே உடுவான் .... தொட்டுப்பாரு ன்னு அவனும் திராவிட மாடல் ஸ்டைல்ல சொல்லுவான் ......


சாண்டில்யன்
டிச 18, 2024 20:18

இப்போல்லாம் எவரையும் தொட்டுகூட பாக்க முடியாதுவே திராவிட மாடலுக்கு எங்கே போறதாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை