உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை: மஹாராஷ்டிராவில் ஜூலை முதல் அமல்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை: மஹாராஷ்டிராவில் ஜூலை முதல் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 21 முதல் 60 வயது உள்ள தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என மஹாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evmrog2r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்ட சபையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி துவங்கியது. சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 60 வயது உள்ள தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய திட்டங்கள்:

* மாநில அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.* ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.* மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.* வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாதம் 1,500 ரூபாயும், அரசு பஸ்களில் 50 சதவீத கட்டணச் சலுகையும், வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
ஜூன் 29, 2024 21:12

உலகிலேயே இலவசங்களை அள்ளிக்கொடுக்கும் மாநில அரசுகளும் மத்திய அரசும் போட்டிபோட்டுக்கொண்டு இலவசங்களுக்கு அடிமைகளாகி மானகெட்ட பொழைப்பு நடத்துவது இந்தியாவிலேதான் இருக்கிறது இதனால் பல பல அந்நிய நாட்டவர்கள் இந்தியாவினுள்ளே ஊடுருவி வாழ வழி வகுத்துக்கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள் கட்டுப்படுத்தவே முடியாது


sridhar
ஜூன் 29, 2024 21:06

Cash doles like this will ruin the country's economy. All must sit together and eradicate freebies.


தமிழ்வேள்
ஜூன் 29, 2024 19:44

சில்லறை கட்சிகளை தடைசெய்து இரண்டு கட்சிகள் மற்றும் அதிபர் ஆட்சி முறைக்கு மாறாவிட்டால் பாரதம் உருப்படாது... மொழிவழி மாநில அமைப்பு கலைக்கப்பட்டு பாரதம் பத்து மண்டலங்கள் அல்லது பிரதேசங்களாக மறுசீரமைப்பு செயாயப்படுவது காலத்தின் கட்டாயம்....படித்தவன் வரிகட்டுபவன் தொழில் செய்பவனுக்கு மட்டும் ஓட்டு உரிமை போதும்.. வாக்குரிமை வயது 23க்கு குறையக் கூடாது...இவற்றை செய்யாமல் இந்த தேசத்துக்கு விடிவுகாலம் பிறக்காது


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2024 19:33

எல்லா கூத்தும் பெண்களின் ஓட்டை பிடுங்குவதற்காக..


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2024 19:31

60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏன் கிடையாது. செலவுயிருக்காதா..?


தமிழ், கோவை
ஜூன் 29, 2024 19:18

இந்தியாவுலேயே பணக்கார மாநிலம்னா அது மகாராஷ்டிரா தான். அவ்ளோ காசு இருக்கு அரசிடம். ஆனா சாலை போக்குவரத்துல ஒரு சாலை கூட ஒழுங்கா இருக்காது தேசிய நெடுஞ்சாலை கூட குண்டு குழியுமா தான் இருக்கும். 100 பேருந்து இருக்க வேண்டிய நகரத்துக்கு 4 பேருந்து மட்டுமே இருக்கும்.மின்சாரம் சீராக கிடைக்காது. குடிநீர் வசதி சரியில்லை. மருத்துவம் பற்றி பேசினா ரத்தக் கண்ணீர் வரும். அதனால இப்படி குடுத்து சரிகட்ட பாக்குறாங்க


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 21:59

என்னவோ எழுதறீங்க. ஆனா மும்பை வாசிகள் மின்வெட்டை சந்தித்ததே கிடையாது.குடிநீர் சூப்பர்.


GMM
ஜூன் 29, 2024 19:14

60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவி தொகை கொடுக்கலாம். 21 முதல் 60 வரை உழைக்கும் மகளிருக்கு ஏன் உதவி தொகை? ஏழை, பணக்கார, ஒடுக்க பட்ட, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அடுத்தவர் கட்டும் வரி பணத்தில் தானம், தர்மம், உதவி தொகை. இதனை முறைப்படுத்த ஒரு அமைப்பிற்கும் அதிகாரம் இல்லை?


sureshpramanathan
ஜூன் 29, 2024 18:37

All tax money is paid like this as freebies then there is no money for roads and other development How we can become 3 rd largest economy All people become beggars waiting for free money from state governments That also in Tamilnadu some dmk goon may be doing fake distribution and return major amount back to Stalin and gang People need to suck their thumb and wait They will do a photoshoot with few ladies and announce as if entire Tamilnadu is paid Corruption to the core


Velan
ஜூன் 29, 2024 18:22

விடியலை மிஞ்சிடும் போல


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 29, 2024 17:46

எல்லாமே ஒட்டு அரசியல். மக்களுக்கான அரசியல் செய்ய யாருக்கும் அக்கறை இல்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை