உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு

புதுடில்லி: முந்தைய கெஜ்ரிவால் அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு காரணமாக டில்லி அரசுக்கு ரூ.2,002 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.டில்லியில் 2021-2022 ம் நிதியாண்டில் அரசின் மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஆக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமினில் வெளியே வந்தனர். இருவரும் பதவி பறிபோன நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சி.ஏ.ஜி., அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யபா.ஜ., அரசு முடிவு செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4f6h9pgj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக சி.ஏ.ஜி., அறிக்கையை சட்டசபையில் பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ளது.அதில்,குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதிக்கப்படாததால், ரூ.941.53 கோடியும்லைசென்ஸ் திருப்பி அளிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் டெண்டர் விடாத காரணத்தினால் ரூ.890.15 கோடியும்கோவிட் காரணம் காட்டி, கட்டணத்தை தள்ளுபடி செய்ததால் ரூ.144 கோடியும்ஜோனல் லைசென்ஸ் வழங்குவதற்கு பாதுகாப்பு கட்டணத்தை முறையாக வசூலிக்காத காரணத்தினால் ரூ.27 கோடி என மொத்தம் ரூ.2,002.68 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், விதிகளை முறையாக பின்பற்றவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சஸ்பெண்ட்

முன்னதாக இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Laddoo
பிப் 25, 2025 23:12

போர்ஜ்ரிவால் எல்லா பாடத்தையும் படிச்சே, சரி ஆனா கட்டுவின் "விஞ்ஞான" பாடம் படிக்கலியே அடலீஸ்ட் த்ரவிஷ மாடெலை படிக்கலியே. அய்யகோ


Indhiyan
பிப் 25, 2025 21:11

கேவலம் கேவலம். ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, ஊழல் கட்சிகளுடன் கொள்ளை கூட்டணி வைத்த துரோகி. ஜன் லோக்பால் அப்புறம் வாயை திறக்கவே இல்லை. நம்பி கெடுத்த ஆசாமி. இனிமேல் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக யாரவது கட்சி ஆரம்பித்தால் மக்கள் நம்ப மாட்டர்கள், இவர் செய்த கேவலமான வேலையால்.


Ramesh Sargam
பிப் 25, 2025 20:38

டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஆம் ஆத்மீ தலைவர் கெஜ்ரி மற்றும் அவரின் கூட்டாளிகளின் அசையும், அசையா சொத்துக்கள் எல்லாம் முடக்கப்படவேண்டும்.


Indhuindian
பிப் 25, 2025 18:56

இது சும்மா ட்ரைலர்தான் மெயின் பிக்ச்சர் இன்னும் இருக்கு


GMM
பிப் 25, 2025 17:43

தணிக்கை துறை இழப்பு 2000 கோடி என்றால்,, சம்பந்தப்பட்ட அதிகாரி, அரசியல் வாதிகளிடம் பிடித்தம் செய்து அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டியது மாநில தலைமை செயலர் . பொறுப்பானவர் சொத்து அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். இல்லை என்றால், சிறை தண்டனை கொடுக்கலாம். உச்ச நீதிமன்றத்தை விட ஒரு படி கூடுதல் அதிகாரம் பெற்றது தணிக்கை துறை . சி. ஏ .ஜி . தடை ஆணையம் மிக சக்தி வாய்ந்தது. வழக்கறிஞர் வலு இழக்க 2 ஜி யில் செய்து விட்டனர்.


baala
பிப் 25, 2025 17:14

ஆட்சி மாறும்போது பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்


என்றும் இந்தியன்
பிப் 25, 2025 16:26

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு. என்னும் பழமொழி பொருந்தும் இந்த சொரிவாளுக்கு. கெடுத்ததெல்லாம் கெடுத்தான் அவன் யாருக்காக கெடுத்தான் ஒருத்தரையா கெடுத்தான் இந்த ஊரையே கெடுத்தான் தன் சுயநலத்திற்காக இந்த ஊரையே கெடுத்தான். இதுவும் இந்த சொரிவாளுக்கு பொருந்தும்


ஆரூர் ரங்
பிப் 25, 2025 16:20

INDI கூட்ட்டணியில் இருக்க முழுத்தகுதி பெற்றகட்சி துடைப்ப கட்சி


saiprakash
பிப் 25, 2025 17:35

இதே CAG அறிக்கையிலே 56இன்ச் அரசாங்கத்தில 7500 கோடிகள் ,ஊழல் நடந்துருக்குனு சொல்லுச்சே அப்போ கையில் புடுச்சு தூங்கிகிட்டு இருந்திங்களா


Suppan
பிப் 25, 2025 16:07

எங்க ஊர் திருட்டு திராவிடர்களிடமிருந்து எப்படி மாட்டிக்கொள்ளாமல் கொள்ளை அடிப்பது என்று ஆதிஷி போன்றோர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இது பால பாடம் . மாட்டிக்கொண்டால் எப்படி திசை திருப்புவது என்பது அடுத்த லெவல். இப்படி பல லெவெல்கள் கைவசம் உள்ளன. தேவைக்கு உங்கள் கூட்டாளிகளான திராவிடக் கட்சிகளைத்தொடர்பு கொள்ளவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை