உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்

 விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம்

புதுடில்லி: விபத்தில் உயிரிழந்த 22 வயது பெண்ணின் பெற்றோருக்கு, 24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது . புதுடில்லியைச் சேர்ந்த ஷில்பா,22, தன் தோழி அஞ்சலி மற்றும் நண்பர் ரோஹித் ஆகியோருடன், 2020ம் ஆண்டு டிச.,7ம் தேதி பைக்கில் சென்றார். நண்பர் ரோஹித் வண்டியை ஓட்டினார். தோழியர் இருவரும் பின் னால் அமர்ந்து இருந்தனர். அதிவேகமாகவும், வளைத்து நெளித்தும் ரோஹித் வண்டியை ஓட்டினார். திடீரென நிலைதடுமாறி வண்டி சாலையில் சரிந்து மூவரும் பலத்த காயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த ஷில்பா, அதே இடத்தில் உயிரிழந்தார். இழப்பீடு கோரி ஷில்பாவின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய தலைமை அதிகாரி ருச்சிகா சிங்லா விசாரித்தார் . விசாரணை முடிவடைந்த நிலையில், ஷில்பாவின் பெற்றோருக்கு 24.75 லட்சம் இழப்பீடு வழங்கவும், ரோஹித் ஓட்டிச் சென்ற பைக் வேறொருவருக்கு சொந்தமானது என்பதால், வண்டியை ஓட்டிய ரோஹித் மற்றும் வண்டியின் உரிமையாளர் இருவரும் இணைந்து இந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி