உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபான்மையினருக்கு ரூ.393 கோடி ஒதுக்கீடு தாராளம்! கர்நாடக பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு

சிறுபான்மையினருக்கு ரூ.393 கோடி ஒதுக்கீடு தாராளம்! கர்நாடக பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, : கர் நாடக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, முஸ்லிம், கிறிஸ்துவ ர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமூகத்திற்கு, 393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமே முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதன் வாயிலாக அந்த சமூகத்தின் ஓட்டுகளை பெற முயற்சிப்பதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது.இந்நிலையில், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் சித்தராமையா, மாநில அரசின் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில், சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் விபரம்:சிறுபான்மை சமூக மாணவர்களுக்காக, 50 மொரார்ஜி தேசாய் பள்ளிகள் துவங்கப்படும்100 புதிய மவுலானா ஆசாத் பள்ளிகள் துவங்கப்படும்அரசு, தனியார் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு, அரசு சார்பில் அளிக்கப்பட்ட கட்டணம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த திட்டம் மீண்டும் துவங்கப்படும்சிறுபான்மை சமூக பெண்கள் சுயதொழில் துவங்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடுமங்களூரில் 10 கோடி ரூபாய் செலவில், 'ஹஜ் பவன்' கட்டப்படும்ஜெயின் சமூக மக்களின் வழிபாட்டு தலங்களை பராமரிக்க 50 கோடி ரூபாய்கிறிஸ்துவ சமூகத்தின் வளர்ச்சிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடுசிக்லிகர் சமூகத்தினரை பொருளாதார ரீதியாக உயர்த்தும் திட்டங்களுக்கு 2 கோடி ரூபாய்பீதர் ஸ்ரீநானக் ஜிரா ஜாகேப் குருத்வாராவை மேம்படுத்த 1 கோடி ரூபாய்ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் நலனுக்கு, பட்ஜெட்டில் 393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.கடந்த பட்ஜெட்டில் எப்படி? கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததும், ஜூலையில் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், கிறிஸ்துவ சமூக மேம்பாட்டிற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். இந்த பட்ஜெட்டில் மேலும் 100 கோடி உயர்த்தி, 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.ஜெயின் மக்கள் வழிபாட்டு தல பராமரிப்புக்கு, கடந்த பட்ஜெட்டில் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; இம்முறை, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 'ஹஜ் பவன்' கட்டப்படும் மங்களூரு, சபாநாயகர் காதரின் சொந்த தொகுதியாகும்.பா.ஜ., ஆட்சியில் பசவ ராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, 2022 - 2023 பட்ஜெட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் இயங்கும் பள்ளிகளை மேம்படுத்த, 25 கோடி ரூபாயும், கிறிஸ்துவ சமூக வளர்ச்சிக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

மேகதாது அணை கட்ட நடவடிக்கை

மேகதாதுவில் காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால், மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்பதால், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டி, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, ஒரு தனி திட்டப் பிரிவு மற்றும் இரண்டு உட்பிரிவுகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இத்திட்டத்தின் கீழ், வனப்பகுதியில் நீரில் மூழ்கும் நிலத்தை அடையாளம் காணும் பணியும், மரங்களை எண்ணும் பணியும் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்று, பணிகளை விரைந்து துவங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ