வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டிரைவரின் பெயர்லதான் விசேஷம் .....
சிக்கபல்லாபூர் : டில்லியில் இருந்து, பெங்களூருக்கு கன்டெய்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் கடத்தப்பட்டன.டில்லியில் உள்ள சீன ஸ்மார்ட் போன் நிறுவனத்துக்கு சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள், கன்டெய்னர் வாகனத்தில் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன. 22ம் தேதி, டில்லியில் இருந்து புறப்பட்டது. ஆனால் பெங்களூரை சென்றடையவில்லை.சந்தேகமடைந்த சீன நிறுவன அதிகாரிகள், கன்டெய்னரில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., சாதனத்தை வைத்து, ஆய்வு செய்தபோது, சிக்கபல்லாபூரின் ரெட்டி கொல்லரஹள்ளி அருகில் கன்டெய்னர் நின்றிருப்பது தெரிந்தது.அவர்கள் நேற்று கொல்லரஹள்ளிக்கு வந்தபோது, கன்டெய்னர் காலியாக இருந்தது. மொபைல் போன்கள் மாயமாகி இருந்தன.மொபைல் போன்களை சப்ளை செய்யும் பொறுப்பை, 'சேப் ஸ்பீட் கேரியர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் ஏற்றிருந்தது. இந்த நிறுவனத்தில் ராகுல் டிரைவராக பணியாற்றினார். பெங்களூருக்கு மொபைல் போன்களை கன்டெய்னரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். தற்போது இவர் காணாமல் போயுள்ளார்.மொபைல் போன்கள் கடத்தப்பட்டது குறித்து, சிக்கபல்லாபூரின், பரேசந்திரா போலீஸ் நிலையத்தில் சீன நிறுவன அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். டிரைவர் ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.
டிரைவரின் பெயர்லதான் விசேஷம் .....