உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டில் ரூ.3.6 கோடிக்கு முட்டை பப்ஸ்: ஜெகனுக்கு செக் வைக்கும் சந்திரபாபு கட்சி

5 ஆண்டில் ரூ.3.6 கோடிக்கு முட்டை பப்ஸ்: ஜெகனுக்கு செக் வைக்கும் சந்திரபாபு கட்சி

அமராவதி: ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டதாகவும், அது தொடர்பான பில்களின் புகைப்படங்கள் வைரலானது. இதனை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வருகின்றனர். ஆனால், ஜெகன்மோகன் கட்சி, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது முதல், ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. முதல்வராக இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ரிஷிகொண்டாவில் அரண்மனை போன்ற ஒரு கட்டடம் கட்டியது, அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, அவர்கள் விரைவாக பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள், விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக என ஜெகன்மோகனுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் வரிசையாக புகார்களை வெளிக்கொண்டு வந்தனர். அந்த வகையில் இப்போது 'முட்டை பப்ஸ் ஊழல்' என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 993 பப்ஸ்

ஜெகன்மோகன் முதல்வராக இருந்த 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் அவரது முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.72 லட்சத்திற்கு முட்டை பப்ஸ்க்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 993 முட்டை பப்ஸ்கள் என ஐந்து ஆண்டுகளில் சுமார் 18 லட்சம் முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக பில்கள் அடங்கிய புகைப்படங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் இணையத்தில் வைரலாக பரப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜெகன்மோகன் கட்சி, எங்களுக்கு எதிராக பரப்பப்படும் 'போலி பிரசாரம்' எனக் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N Sasikumar Yadhav
ஆக 22, 2024 10:37

என்ன இருந்தாலும் நம்ம திராவிட மாடல் தீயணைப்பு செலவுக்கு 27 லட்சம் ரூபாய் ஒரு வாரத்தில் செலவு செய்ததைவிட இது குறைவுதான்


Matt P
ஆக 22, 2024 03:23

இப்படி மாறி மாறி இன்னொருத்தன் ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் பணத்துக்கு பாதுகாப்பு. அவனுகளே செஞ்ச தவறுகளுக்கு அடிச்சுகிட்டு சாகனும். திருப்பி திருப்பி ஒருத்தனே ஆட்சியை கைப்பற்ற்றினால் வீட்டில வளரும் நாய் பூனைகளுக்கு கூட அமைச்சர் பதவி கொடுத்த்து பதவியின் தன்மையை குறைத்து மக்கள் ஆட்சியின் மாண்பையும் குறைத்து விடுவார்கள்.


Bala
ஆக 22, 2024 02:22

திருட்டுத் திராவிடிய கொலையனின் மரபணுக்காரன்


அப்பாவி
ஆக 21, 2024 22:16

ரெட்டிகாரு 17 லட்சம் ரூவாய்க்கு இட்லி சப்ளை பண்ணலியா? இப்போ அங்கே முட்டை சமுசா வியாபாரம் செய்யறாப்புல.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 21:38

கடைசி முட்டைகளை மக்கள் தேர்தலில் கொடுத்து விட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 21:35

மக்கள் கையில் திருவோடு இருக்கும்போது இவர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறியிருப்பார்கள் ....


Mr Krish Tamilnadu
ஆக 21, 2024 21:27

செளகரியமாக வாழ்ந்தவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படி தான். அங்கே அப்படி. இங்கே கார் ரேஸ். மன்னராட்சி நடந்து உள்ளது, மக்கள் வரிப்பணத்தில் சுக போக ராஜ செலவுகள். கிருஷ்ண தேவராயர் மந்திரி தெனாலிராமன்கள் எதிர் அணியில் இருந்து வாய்மூடி தூங்கி விட்டார்கள் போல், தவறு நடக்கும் போது விட்டு விட்டு இப்போது விழித்து இருக்கிறார்கள்.


Ramesh Sargam
ஆக 21, 2024 21:04

தமிழகத்தில் 11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி.அதைவிட பெரிய அதிர்ச்சி ஜெகன் கொடுத்த அதிர்ச்சி. எவ்வளவு அதிர்ச்சி கொடுத்தாலும் வாக்களித்த மக்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து மேலும் நமக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.


Balasubramanian
ஆக 21, 2024 19:55

எங்க ஊரில் தீயணைப்பு படையினருக்கு பதினோரு நாள் டீ காபி செலவு ரூ 27 லட்சம்! இதுவோ ஐந்து ஆண்டுகளுக்கு அதுவும் முதல்வர் அலுவலகத்துக்கு வெறும் முட்டை பப்ஸ்–க்கு ரூ 3.60 கோடி தானா? ஜூஜூபி!


Kasimani Baskaran
ஆக 21, 2024 18:52

மாடல் அரசையே மிஞ்சி விடுவார்கள் போல தெரிகிறது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ