உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானியிடம் ரூ.100 கோடி நன்கொடை: பா.ஜ.,விடம் வசமாக சிக்கியது காங்கிரஸ்!

அதானியிடம் ரூ.100 கோடி நன்கொடை: பா.ஜ.,விடம் வசமாக சிக்கியது காங்கிரஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெலுங்கானா அரசுக்கு பிரபல தொழிலதிபர் அதானி ரூ.100 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.,- பி.ஆர்.எஸ்., ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.தெலுங்கானாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், பிரபல தொழிலதிபர் அதானியை பா.ஜ., உடனும், பிரதமர் மோடியுடனும் தொடர்புபடுத்தி தேர்தல் பிரசாரத்தின் போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் விமர்சித்து வருகிறார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் எதிரொலித்து வருகின்றனர்.இச்சூழ்நிலையில், அதானி, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் இளைஞர்களுக்கு தொழில்துறை திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அமைக்கப்படும் பல்கலைக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்குவதற்கான காசோலையை அதானி வழங்கினார். அதனை ரேவந்த் ரெட்டி பெற்றுக் கொண்டார்.தற்போது, இதனை வைத்து அம்மாநில எதிர்க்கட்சிகளான பாரதிய ராஷ்ட்ரீய சமீதி(பி.ஆர்.எஸ்.,) மற்றும் பா.ஜ., கட்சிகள் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அக்கட்சி இரட்டை வேடம் போடுவதாக சாடி உள்ளன.இது தொடர்பாக பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தினமும் அதானி அதானி என ராகுல் பேசி வருகிறார். இதனையும் மீறி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதானியிடம் இருந்து நன்கொடையை பெற்றுக் கொண்டார். உங்கள் சொந்த முதல்வரே அவரை மதிக்கவில்லை. அவரை யாரும் 'சீரியசாக' எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அந்த பதிவில் அமித் மாளவியா கூறியுள்ளார்.பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கேடி ராமராவ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஒரு புறம் ராகுலும், காங்கிரசும், பிரதமர் மோடி, அதானியை நண்பர்கள் எனக்கூறி அவர்களின் நட்பை விமர்சித்து வருகிறது. ஆனால், தெலுங்கானாவில், ரேவ்ந்த் மற்றும் அதானியை இணைந்து ரேவ்தானி(Revdani)யாக பார்க்கிறோம். அல்லது ராகுல் மற்றும் அதானியை சேர்த்து ராகாதானி(Ragadani) ஆக பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

KAMARAJ M
அக் 22, 2024 12:31

இது லஞ்சம் இல்ல நன்கொடை


venugopal s
அக் 21, 2024 16:32

அதனால் தான் நாய் விற்ற காசு குரைக்காது என்ற பழமொழியே வந்தது!


suresh guptha
அக் 21, 2024 15:51

EVEN IN T N CASES AGAINST ADANI R DROPPED


ஆரூர் ரங்
அக் 21, 2024 14:20

லாடடரி மார்ட்டினிடம் திமுக நிதி வாங்கியது சரி. ரேஸ் ராமசாமியிடம் ஆற்காட்டார் திமுக தேர்தல் நிதி வாங்கியதும் சரி. இப்போதெல்லாம் யார் கைக்காசை கழகத்துக்கு செலவழிக்கிறார்கள்? பெரும்பாலும் 200 ஆட்களின் ஆதரவில் கழகம் நடத்தும் நிலையில் காந்தி குடும்ப நேரு காங்கிரசின் மாமூல் வாழ்க்கை தவறானதுன்னு சொல்லிப் பயனில்லை.பாவம் பப்பு.


kulandai kannan
அக் 21, 2024 14:20

திராவிட மாடலுக்கு


ஆரூர் ரங்
அக் 21, 2024 13:20

பரம ஏழைக்கட்சி காங்கிரசை விமர்சிக்கலாமா?


Barakat Ali
அக் 21, 2024 11:02

பார்க்கப்போனா அம்பானி, அதானி தூக்கி போடுற பிஸ்கட்டுகளை கவ்வுற கட்சிங்க, நன்கொடை நிறுவனங்கள் எல்லாமேதான் ..... அவர்களுக்கும் வரிப்பணம் குறையும் ....


Barakat Ali
அக் 21, 2024 10:40

அதானி விட்டெறிந்தால் துக்ளக்காரும் பொறு கீ சாப்பிடுவார் என்பது துக்ளக்காரின் அடிமைகளுக்கும் தெரிந்த விடயமே .....


S Regurathi Pandian
அக் 21, 2024 09:49

அரசாங்கத்திற்கு கொடுக்கும் நன்கொடையும் அரசியல் கட்சிக்கு பெறுவதும் ஒன்றா? அவருக்கு அரசாங்கங்கள் வழங்கிய சலுகையில் கொஞ்சம் கொசுறு பணத்தை அரசாங்கத்திற்கு tharukiraar.


பேசும் தமிழன்
அக் 21, 2024 09:09

பப்பு.... இது என்ன கணக்கு... கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்...... இல்லை சீனா நாட்டுடன் உங்கள் கான் கிராஸ் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் போல் மூடி மறைக்க போகிறீர்களா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை