உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்று ரூ.34 லட்சம்; இன்று ரூ.2,200 கோடி: பிரதமர் மோடி சொல்லும் புள்ளிவிபரம் என்ன?

அன்று ரூ.34 லட்சம்; இன்று ரூ.2,200 கோடி: பிரதமர் மோடி சொல்லும் புள்ளிவிபரம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் போது அமலாக்கத்துறை வெறும் ரூ.34 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்தது. ஆனால், எனது தலைமையிலான 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: ஒடிசாவின் தலைவிதி மாறப்போகிறது. ஜூன் 4 தான் தற்போதைய ஒடிசா அரசின் காலாவதி தேதி; ஜூன் 10ல் ஒடிசாவில் பா.ஜ., முதல்வர் பதவியேற்பார். மேற்குவங்கத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிழைப்புக்காக போராடுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 3 எம்எல்ஏ.,வாக இருந்தோம், பின்னர் அம்மாநில மக்கள் எங்களுக்கு 80 இடங்களை கொடுத்தனர். இந்த முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ., பெரிய வெற்றியைப் பெறும்.

எதிர்க்கட்சிகள்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இருளில் வைத்து அவர்கள் (எதிர்க்கட்சியினர்) கொள்ளையடிக்கிறார்கள். எனவே அவர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். வரப்போகும் நெருக்கடியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம்தான் இந்த தேர்தல். எனவே இது குறித்து மக்களுக்கு விளக்கமளித்து வருகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு மீறப்படுகிறது; அதுவும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மீறப்படுகிறது. தலித்துகள், பழங்குடியினரின் நலம் விரும்பிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் உண்மையில் அவர்களுக்குப் பரம எதிரிகள். எனது தலித், பழங்குடியினர், ஓபிசி சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக போராடுவேன்.

ரூ.2,200 கோடி பறிமுதல்

மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் என்ன ஆதாரம் இருக்கிறது? அவர்களின் குப்பையை உரமாக மாற்றி, அதில் இருந்து நாட்டுக்கு நல்லவற்றை விளைவிப்பேன். மன்மோகன் சிங் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடியை பறிமுதல் செய்துள்ளது. 2,200 கோடி ரூபாயை வெளிக்கொண்டுவந்தவரை மதிக்க வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

doss
மே 29, 2024 10:19

இவரது ஆட்சியில் அவ்வளவு ஊழல். 2016 ல் பணமதிப்பிழப்பு. எனவே எட்டு ஆண்டுகள் இவரது ஆட்சி ஊழல் அதுதான் உண்மை


Sathyanarayanan Sathyasekaren
மே 31, 2024 06:23

இன்னும் பணமதிப்பிழப்பு பற்றி புலம்பல் ? அய்யாவுக்கு வீட்டில் ஒளித்து வைய்த்த கள்ளப்பணம் காலி போல.


Balaji
மே 29, 2024 08:00

Due to demonization only Pakistan become bankrupt.Pakistan use to print indian notes over 200000 crores every year with the printing machine given by congress government and these notes were used by terrorists and stone pelting at kashmir vally against indian armed forces.It is a reality and this government act smartly on intelligence reports with demonization Now the time has come to seize all corrupt money parked outside India by many politicians and bring it back to the nation which will accelerate the growth to double digit.Many statistics says around 25% of any project spending is parked outside India through hawala by politicians and officials and if the central government takes action lots of noise will come from politicians such as harassment. My sincere request to all people of india is support anyone who is taking action against corruption to leave better India to our children Forget your faith to any party or politicians be neutral because country is above all. This country is a holy land which has taught dharma to the world. Be proud to have a birth here and let us take our country to our glorious past. Jaihind


Umashankar Umashankar
மே 29, 2024 07:58

எந்த ஆட்சியில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என சொல்வதை விட, எந்த ஆட்சியில் கருப்பு பண நடமாட்டம் குறைந்துள்ளது என்பதை நிரூபிப்பதே பிடிபடும் தொகை தொகை தான்.


babu
மே 28, 2024 21:53

pm care வசூல் எவ்வளவு


Ganesan Krish
மே 28, 2024 19:17

மோடி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.. மக்கள் தான் புரிந்து கொண்டு மோடியை ஆதரிக்க வேண்டும்.. இவர் போன்று இன்னொரு தலைவர் இந்திய மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை..


Kasimani Baskaran
மே 28, 2024 15:32

நீதிமன்றம் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டும் கூட இத்தனைபேரை பிடித்து இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயம் சாதனைதான். பகுத்தறிவாளர் சிலர் வசூல் மெஷின் கூட மகா யோக்கியன் என்று உருட்டுகிறார்கள். களவாணித்தனம் செய்வோருக்கு முட்டுக்கொடுப்போர் அடிப்படையில் அயோக்கியர்களாவே இருக்க முடியும்.


Syed ghouse basha
மே 28, 2024 15:14

நீங்கதான் பணமதிப்பிழப்பின் மூலம் கருப்பு பணத்தை ஒழிச்சுட்டீங்களே அப்புறம் எப்படி இவ்வளவு கருப்பு பணம் உருவானது இது உங்க ஆட்சியில் உருவான கருப்பு பணம்தானே நீங்க தானே பொறுப்பு இதில் பெருமை எங்கிருந்து வந்தது?


Balaji
மே 28, 2024 20:42

நீங்கள் பாகிஸ்தானுக்கு இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரம் கொடுத்தீர்கள். அவர்கள் பல லட்சக்கணக்கான நோட்டுகள் அடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடும் வேலையில் அதை எதிர்கொள்ள பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதில் பாகிஸ்தானுக்கு பாதித்ததைவிட சில கட்சிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை செய்யாமல் இருந்திருந்தால் இன்னேறம் நம்நாடு பாகிஸ்தான் போல ஆகியிருக்கும். ஊழல்வாதிகளால் பலன் அடையும் சுயநலவாதிகள் இப்போது கூட்டாக கதறுவது


Syed ghouse basha
மே 28, 2024 14:56

மன்மோகன்சிங் உண்மையான குற்றவாளிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கைப்பற்றிய பணம் அது நீங்க கணக்கில் உள்ள பணத்தையும் கைப்பற்றி அவர்களை மிரட்டி கட்சிக்கு நன்கொடை கொடுத்தவர்களை விடுவித்து கொடுக்காதவர் மீது பெரும்பாலும் பொய்வழக்கு போட்டு வழக்கு நிலுவையில் உள்ள தொகை இது


அசோகன்
மே 28, 2024 14:43

உண்மையை மோடி உரக்க கூறியுள்ளார்..... மக்களாகிய நாம் புரிந்துகொண்டு நமக்காக வாழும் மோடிஜிக்கு தோள் கொடுப்போம்


Lion Drsekar
மே 28, 2024 12:50

திரு மோடியோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டால் உடனடியாக முடியாட்சியினர்கள் தங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் வாயிலாக இது தொடர்பான செய்திகளுக்கு பொய்யான செய்திகளை பரப்புவதில் வல்லவர்கள், தற்போதைய செய்தியும் அவர்களின் கருத்தும் படித்தால் எல்லாமே உண்மைபோல் இருக்கிறது . வந்தே மாதரம் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை