வியாபாரியிடம் ரூ.97 லட்சம் கொள்ளை
புதுடில்லி:காரவால் பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ் அன்சாரி,45. செம்பு வியாபாரி. பழைய டில்லியிலில் 16ம் தேதி, வசூலை முடித்து விட்டு, முஸ்தபாபாத் சென்றார். வடகிழக்கு டில்லி பிரிஜ்புரியில், அன்சாரியை தடுத்து நிறுத்திய இரு கொள்ளையர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 97 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.