உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்

உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: '' உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபடுகிறது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா தனித்துவமிக்க நாடு. உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பாடுபடுகிறது. நம் நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி. தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதை கிடைக்கச் செய்வதற்கே நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று உலகம் தடுமாறி வருகிறது. கடந்த 2000 ஆண்டுகளில் பல சோதனைகள் இருந்த போதும், பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. உலகிற்கு ஒரு தீர்வை வழங்குவதும், மதக் கொள்கை அடப்படையில் வேரூன்றிய நமது தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பப்பட்ட ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதும் நமது கடமை. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஆக 15, 2025 20:44

...ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களிடம் மட்டும் அமைதி கொண்டுவர படாதபாடு படுகிறது. தவறு அரசு மீது இல்லை. ஒத்துழைக்காத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது.


suresh Sridharan
ஆக 15, 2025 18:51

உலகில் அமைதி விரும்பும் ஒரே மதம் இந்து மதம். மற்ற எம்தத்திற்கும் அது சம்பந்தமில்லாத... அப்படித்தான் அவர்கள் நினைக்கிறார்கள் ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே பாரத் மாதா கி ஜே


J.Isaac
ஆக 15, 2025 19:18

முதலில் ஒழுக்கமாக சாலை விதிகளை கடைப்பிடிக்க பயிற்சி கொடுங்கள்.


Padmasridharan
ஆக 15, 2025 18:40

உலக அமைதி பெறணும்னா இந்தியாவின் மாநிலங்களுக்குள் அமைதி நிலவனும் சாமி. லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களை அகற்ற வேண்டும். மனிதருக்குள் சுதந்திரம் பெற்றும் பணத்திற்கு அடிமையாக இருக்கின்றார்கள் நிறைய பேர். கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கனும்னு நினைப்பவர்களை விட மத்தவங்க கிட்ட இருக்கிறத எப்படி ஏமாத்தி வாங்கலாம்னுதான் நிறைய பேர் சுத்திகிட்டு திரியுறாங்க.


Narayanan Muthu
ஆக 15, 2025 17:34

முதலில் நீங்கள் இந்தியாவில் அமைதியை கொண்டுவர பாடுபடுங்கள். அப்புறம் பார்ப்போம் உலக அமைதியை


mathavan
ஆக 15, 2025 16:34

நடக்கற கலவரத்துக்கு முழு காரணமே பசங்கதான்,


vivek
ஆக 15, 2025 17:23

துப்புரவு தொழிலாளர்கள் நடு இரவில் கைது...இதை சொல்றார் போல


N Sasikumar Yadhav
ஆக 15, 2025 18:19

குர்லா பாய்ஸ் இருக்கும்வரை அமைதியை எதிர்பார்க்க முடியாது


மனிதன்
ஆக 15, 2025 18:46

அதேதான்... முதலில் தான் சார்ந்த இடங்களில் அமைதியை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.நீங்க நல்ல இருப்பீங்க....


ஆரூர் ரங்
ஆக 15, 2025 20:00

சிலிண்டர் கூட்டம்.


அப்பாவி
ஆக 15, 2025 15:51

இது.போருக்கான நேரமல்லன்னு சொல்லிக்கொண்டு இருக்கோமே...


vivek
ஆக 15, 2025 16:02

நேர்மை, அமைதி அப்பாவிக்கு பிடிக்காத வார்த்தை ...பிடித்தது கிண்டல், கேலி...அவர் வளர்ப்பு அப்படி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை