உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூபாய் மதிப்பு சரிந்ததால் பணவீக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை; பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

ரூபாய் மதிப்பு சரிந்ததால் பணவீக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை; பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால் பணவீக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய் 14 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90ஐ கடந்துள்ளது. பெரிய நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தாமதம், உலக சந்தையில் நிலையற்ற தன்மையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக உள்ளன. 2025ம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 5 சதவீதம் குறைந்துள்ளது. இது தொடர்பாக, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்தையோ அல்லது ஏற்றுமதியையோ பாதிக்கவில்லை. அடுத்த ஆண்டு ரூபாய் மதிப்பு மேம்படும். இந்திய ரூபாய் மதிப்பு சரிவதைப் பற்றி மக்கள் கவலைப்படவோ அல்லது தூக்கத்தை இழக்கவோ கூடாது. இவ்வாறு அனந்த நாகேஸ்வரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை