உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜனவரியில் மெட்ரோ சேவை

ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜனவரியில் மெட்ரோ சேவை

பெங்களூரு: பெங்களூரு ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை துவங்க, மெட்ரோ ரயிர் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.பெங்களூரில் ஒயிட்பீல்டு - செல்லகட்டா, நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில், தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. ஆர்.வி.ரோட்டில் இருந்து ஓசூர் சாலையின் பொம்மசந்திரா வரை 18.82 கி.மீ., துாரத்திற்கு, புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் டிரைவர் இல்லாத, மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.புதிய பாதையில் சிக்னல் சரிபார்ப்பு உட்பட 99 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன. கடந்த ஆகஸ்டில் மெட்ரோ ரயில் நிர்வாக இன்ஜினியர்கள் டிரைவர் இல்லாத ரயிலில் பயணித்து, சோதனையும் மேற்கொண்டனர்.இந்நிலையில் டிசம்பர் மாதம், தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆனந்த் மதுகர் சவுத்ரி, புதிய ரயில் பாதையில் ஆய்வு செய்கிறார். ஆய்வு முடிந்து அவர் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்தால், ஜனவரியில் இருந்து ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை, மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான பணிகள் உள்ளன. பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும், மத்திய அரசு கூறும் தேதியில் ரயில் சேவை துவங்குவோம். இந்த வழித்தடத்திற்கு மொத்தம் 15 ரயில்கள் தேவை. 15 ரயில்கள் இருந்தால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கலாம்.'ஆனால் தற்போது கைவசம் மூன்று ரயில்கள் மட்டும் உள்ளது. மீதம் 12 ரயில்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. அந்த 12 ரயில்களும் அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் கிடைக்கும். 'இதனால் கைவசம் உள்ள மூன்று ரயில்களை வைத்து, ரயில் சேவையை துவங்குவோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ