உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு

டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். இவ்விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார்.பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். பதவியேற்பு விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜன 12, 2025 19:39

எலக்‌ஷனுக்கு முன்னால் ஜீ அமெரிக்கா சென்ற போது மோடியை சந்திப்பேன்னு ட்ரம்ப் கூறினார். ஜீ பைடனை மட்டும் பாத்துட்டு ட்ரம்பை தவிர்த்தார். அதன் எதிரொலி தான் அழைப்பு இல்லை. போனா போகுதுன்னு ஜெய்சங்கருக்கு அழைப்பு.


Ray
ஜன 12, 2025 19:13

கடந்த தேர்தலுக்கு ட்ரம்ப்புக்கு மோடி சில முறை பிரச்சாரம் செய்தார் ட்ரம்ப் தோற்றார்.


என்றும் இந்தியன்
ஜன 12, 2025 18:29

இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 15 நாளாக இன்டர்நெட்டில் வந்தது இந்த மாதிரி "இந்தியாவிற்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடவில்லை டிரம்ப்"


அப்பாவி
ஜன 12, 2025 13:59

அப்கே பார்... ட்ரம்ப் சர்க்கார்...


திகழ்ஓவியன்
ஜன 12, 2025 13:56

சங்கர் போகிறார்


Duruvesan
ஜன 12, 2025 13:55

விடியல் சார் ஈரோடு எலெக்ஷன் இருப்பதினால் வரலைன்னு கடிதம் எழுதி இருப்பாரு


கிஜன்
ஜன 12, 2025 12:10

டிரம்ப் புத்திசாலி... எலான் மஸ்க்கை ரொம்ப ஆடவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ....


சமீபத்திய செய்தி