உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் இவர் ஆவார்.கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதன் முடிவில் வாசுவை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை மாநில டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் வாசு ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Chandhra Mouleeswaran MK
நவ 11, 2025 21:23

திருப்பதியாக இருந்தாலும் சரி, சபரி மலை தேவசம் போர்டாக இருந்தாலும் சரி, உள்ளூர் வியாயகர் கோவிலாக இருந்தாலும் சரி, நம் காலாவதிக் காம்ரேட்டுக் கம்யூனாட்டிஸ்ட் "கைய வச்சா அது ரைட்டாப் போனதில்லே" அவர்கள் எந்த இடத்தில் கைவண்ணம் காட்டினாலும் அங்கு அவர்களுடன் நிச்சயமாக ஒன்றிரண்டு துணையிருப்பான்கள். பொதுச் சொத்தைத் திருடித் தின்று வயிறு வளர்ப்பதில் சாதிமத வர்க்க பேதம் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது இதுமாதிரியான கொள்ளை, மாநில எல்லைகளை எல்லாம் ஒருங்கிணைத்து நடக்கும் ஒரு கூட்டுக் கொள்ளை


T.Senthilsigamani
நவ 11, 2025 21:11

ஓன்று தெரியுமா ? உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் கம்யூனிசம் தடை செய்யப்பட்ட ஓன்று .ஆம் அங்கு கம்யூனிசம் பேசினால் மரண தண்டனை தான் .அது போல எந்த கம்யூனிச நாட்டிலும் இஸ்லாம் நிலைக்காது. உதாரணத்திற்கு சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களின் நிலை .ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த சுதந்திரமாக உள்ளனர் .ஆம் ராமாயணமும் ,மகாபாரதமும் பொய்மைகள் என கம்யூனிஸ்ட்கள் ஹிந்து இதிகாசங்களை ,இழித்து பேசும் அளவிற்கு சுதந்திரம் உள்ளது .அதன் விளைவை தான் சபரிமலை கோவில் விவகாரத்தில் பார்த்து கொண்டு இருக்கிறோம் .மேற்கு வங்காளம் ,திரிபுரா போன்று கேரளத்திலும் கம்யூனிசம் துடைத்தெறிய பட வேண்டும் .சிவப்பு தாலிபானிசம் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு / ஹிந்து மத கலாச்சாரங்களுக்கு எதிரானது .கம்யூனிசம் இந்தியாவின் சாபக்கேடு


KRISHNAN R
நவ 11, 2025 21:06

ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மன்றம் அமைத்த குழு இருந்தால் மட்டும் அதில் நடவடிக்கை. இல்லை என்றால் பல வழக்குகள் மூடுவிழா என்று முடிக்கப்படும்


தமிழ்வேள்
நவ 11, 2025 20:15

தேவசம் போர்டை சுயாட்சி கொண்ட அமைப்பாக்கி திருவாங்கூர் மஹாராஜா அவர்களை தலைவர் ஆக நியமிக்க வேண்டும்... அவருக்கு முழு சுதந்திரம் தர வேண்டும்.. கடவுளின் தேசம் மீண்டும் பிரகாசிக்கும்.


V Venkatachalam, Chennai-87
நவ 11, 2025 20:01

இவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இருக்காதா? இவர்களால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது? கம்யூனிஸ்ட் கொள்கையே எல்லாரும் பிச்சைக்காரனா இருக்கணும்ங்குறதுதான். பிராக்டிகலா


Santhakumar Srinivasalu
நவ 11, 2025 19:16

தெய்வ காரியங்களில் திருட்டை ஆண்டவர் குடும்பத்தில் சரியான தண்டனை கொடுப்பார்!


Barakat Ali
நவ 11, 2025 19:05

தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு ..... ஹிந்துதானே ????


N Sasikumar Yadhav
நவ 11, 2025 19:35

இந்து என்றாலும் அந்நிய பாலைவன மூர்க்கம் மதமாதிரி திருட்டு கும்பலுக்கும் பயங்கரவாத கும்பலுக்கும் இந்துக்கள் யாரும் கேவலமான முட்டு கொடுப்பதில்லை


Sudha
நவ 11, 2025 19:56

பாவம் குரானில் சொன்னபடி நடந்து தான் இப்படி ஆனார்


Sudha
நவ 11, 2025 19:58

திருட்டுக்கு சம்பந்தம் இல்லாத பிற மத கிண்டலை நிறுத்திக் கொள்வாயா?


Rathna
நவ 11, 2025 19:04

கம்மியும் சேட்டனும் சேர்ந்தால் நல்லது எப்படி நடக்கும்.


RAMESH KUMAR R V
நவ 11, 2025 19:00

கடவுளோட சொந்த நாட்டின் நிலைமை. இதற்கெல்லாம் காரணம் இரண்டு கட்சிகள் மட்டும் பரம்பரை பரம்பரையாக மாநிலத்தை ஆணடுகொண்டு தேவசம் போர்டு என்ற போர்வையில் கொள்ளையடித்து வருகிறது.


M Ramachandran
நவ 11, 2025 18:47

வேட தாரி திருட்டு கம்யூயுனிஸ்டுகளின் களி ஆட்டம் நிறுத்தவேண்டும் .


முக்கிய வீடியோ